இந்த நல்லட்சி அரசாங்கத்தில் பெடிகமகே என்ற ஊடகவியலாளர் தாக்கப்பட்டதுதான் கடைசித் தாக்குதலாக இருக்க வேண்டும் இந்த நாட்டிலே இவ்வாறானதொரு சம்பவம் இனிமேலும் இடம்பெறக் கூடாது. மேலும் ஊடகவியலாளர்களுக்கு எதிரதான தாக்குதல்கள் இனிமேலும்
நடைபெறுமானால் அரைசியல் வாதிகளான நாங்களும், ஊடகவியலாளர்களுடன் சேர்ந்து களத்தில் இழங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்படும் என்பதை இந்த நாட்டிலுள்ள நல்லாட்சி அரசுக்கு எடுத்துக்கூறுகின்றேன். என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன் தெரிவிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் பெரடி கமகே தாக்கப்பட்டதை கண்டித்தும் ஊடகவியலாளர்களை பாதுகாக்ககோரியும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள கையெழுத்து போராட்டம் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்றது. மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் இதன்போது கலந்து கொண்டு கையெழுத்து வைத்து விட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவியகையில்….
கடந்த ஆட்சியிலேதான பல ஊடகவியலாளர்கள் வெள்ளை வேனில் கடத்தப்பட்டார்கள், மிகமேசமான நிலையில் நடத்தப்பட்டார்கள், பலர் கொல்லப்பட்டார்கள். இந்நிலையிலும் கடத்தப்பட்ட பல ஊடகவியலாளர்கள் இதுவரையில் எங்கு இருக்கின்றாரகள் என்பது இதுவihயில் வெளிவரவில்லை.
இவ்வாறான நிலையில் மீண்டும் ஊடக அடக்குமுறை தலைதூக்கியுள்ளது. நாட்டிலுள்ள நல்லட்சியைக் கொண்டு வருவதற்கு இந்த நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்கியதைப் போன்று ஊடகவியலாளர்களும், பங்குதாதர்களாகவுள்ளார்கள். இந்நிலையில் நல்லட்சியில் அனைத்தும் நல்லாதாகவே நடக்கும் என்ற மக்களின் எண்ணத் தேன்றல்களுக்கு மத்தியிலே தற்போது ஒரு சிரேஸ்ட ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார் நளை இன்னும் பல ஊடகவியலார்கள் தாக்கப்பட்ட வாய்ப்பிருக்கின்றது.
கடந்த 2 ஆம் திகதி சிரேஸ்ட ஊடகவியலாளர் பெடிகமகேமீது தாக்குதல் நடாத்திய சூத்திரராதிகளை உடன் கண்டுபிடித்து சட்டத்தின் முன்நிறுத்தி தண்டனை வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடன் முனவர வேண்டும்.
இந்த நல்லட்சி அரசாங்கத்தில் பெடிகமகே என்ற ஊடகவியலாளர் தாக்கப்பட்டதுதான் கடைசித் தாக்குதலாக இருக்க வேண்டும் இந்த நாட்டிலே இவ்வாறானதொரு சம்பவம் இனிமேலும் இடம்பெறக் கூடாது. மேலும் ஊடகவியலாளர்களுக்கு எதிரதான தாக்குதல்கள் இனிமேலும் நடைபெறுமானால் அரைசியல் வாதிகளான நாங்களும், ஊடகவியலாளர்களுடன் சேர்ந்து களத்தில் இழங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்படும் என்பதை இந்த நாட்டிலுள்ள நல்லாட்சி அரசுக்கு எடுத்துக்கூறுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment