25 May 2016

கிழக்குமாகாண சபையின் 59 வது சபை அமர்வு

SHARE
கிழக்குமாகாண சபையின் 59 வது சபை அமர்வு செவ்வாய்க் கிழமை  காலை 9.30 மணியளவில் சபைத் தலைவர் சந்திரதாச கலபதி தலைமையில் ஆரம்பமானது . இதன் போது நிகழ்வின் ஆரம்ப உரையினை கிழக்கு மாகாண
முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாகவும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் வழங்குதல் சம்பந்தமாகவும் நினைவு கூர்ந்தார் .

இதனை தொடர்ந்து வெள்ளத்தினால் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நிவாரணம் வழங்க தேவையான நிதியை சேகரித்தல் தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் தலைமையில் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.








SHARE

Author: verified_user

0 Comments: