24 May 2016

இவ்வாண்டில் 1500 “துருனு சிரம சக்தி” இளைஞர் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள். இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.என். நைறூஸ்

SHARE
கடந்த ஆண்டு 668 ஆக இருந்த “துருனு சிரம சக்தி” இளைஞர் அபிவிருத்தி வேலைத் திட்டம் இவ்வாண்டில் 1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.என். நைறூஸ் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மேற்கொண்டு வரும் இளைஞர் அபிவிருத்தி மற்றும் சமூக அபிவிருத்திப் பணிகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு காரியாலயத்தில் திங்களன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு ஜனவரி தொடக்கம் மே மாதம் வரை இடம்பெற்ற தேசிய கிராம அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், இளைஞர் சமூக அபிவிருத்திச் செயற்பாடுகள் பற்றியும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இவ்வாண்டுக்குள் நிறைவேற்றப்படவுள்ள வேலைத்திட்டங்கள் பற்றியும் இங்கு தெளிவூட்டப்பட்டது.
 
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நைறூஸ், கடந்த 2015 நொவெம்பரில் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கடந்த நொவெம்பெர் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தேசிய கிராம அபிவிருத்தி வேலைத் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டு இவ்வாண்டின் துவக்கத்தில் மக்களிடம் கையளிக்கப்பட்டு விட்டன.
“துருனு சிரம சக்தி” எனும் பெயரில் இளைஞர் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பிரதேச செயலகத்திற்கு தலா இரண்டு வேலைத் திட்டங்கள் என்ற அடிப்படையில் 28 தேசிய கிராம அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தன.
 
இந்த ஒவ்வொரு வேலைத் திட்டமும் தலா ஒரு இலட்சம்  ரூபாய் பெறுமதியைக் கொண்டவை.
 
இதன் கீழ் வீதிகள், பொது நோக்கு மக்கள் ஒன்று கூடல் மண்டபங்கள், வாசிகசாலைகள், பாலர் பாடசாலைகள் ஆகியவற்றிற்கான அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
 
இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் மத்தியில் செயலூக்கம் கொண்டவர்களாக மாற்றுவதே “துருனு சிரம சக்தி” எனும் தேசிய கிராம அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் நோக்கமாகும். இது வெற்றியளித்திருந்தது.
 
இதே வேலைத் திட்டங்கள் இவ்வாண்டு 1500 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. இந்த அதிகரிப்பு இப்பிரதேச இளைஞர் யுவதிகளின் செயலூக்கத்தினை அதிகரிக்க உதவும்.
 
மேலும், இவ்வாண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 348 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் எமக்கு வழங்கப்பட்ட இலக்கையும் தாண்டி 369 இளைஞர் கழகங்களை உருவாக்கி அதில் சுமார் 16 ஆயிரம் இளைஞர் யுவதிகளை அங்கத்தவர்களாகச் இணைத்திருக்கின்றோம். பிரதேச இளைஞர் கழங்கங்களில் விஷேட தேவையுடையோர் விஷேட கரிசனையில் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள்.
 
அத்துடன், பிரதேச இளைஞர் கழகங்கள், பிரதேச இளைஞர் சம்மேளனம், மாவட்ட இளைஞர் சம்மேளனம் என்பன இவ்வாண்டின் பெப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய காலப்பகுதிகளில் அமைக்கப்பட்டு விட்டன.
 
கடந்த 27 வருடங்களுக்குப் பின்னர் வெற்றிகரமாக 5000 பேர் கலந்து கொண்ட “யொவுன்புர” நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 150 பேர் பங்குபற்றியிருந்தனர்.
 
சமீப சில நாட்களில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் எமது மாவட்ட தேசிய இளைஞர் கழக சம்மேளனம் மேற்கொண்ட நிவாரண சேகரிப்பின் மூலம் 150000 ரூபா பணமும், 150000 பெறுமதியான அத்தியாவசியப் பொருட்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.
 
சேகரிக்கப்பட்ட பணம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும்.
 
மேலும், எதிர்வரும் காலங்களில் “நாட்டின் அபி;விருத்தியில் இளைஞர்களின் பங்களிப்பு” எனும் தொனிப் பொருளில் இளைஞர் தினம், இளைஞர் கொடி தினம், “றியலிற்றி ஷோ” இளைஞர் பரிசளிப்புப் போட்டிகள் என்பனவும் இடம்பெறவுள்ளன.











 

SHARE

Author: verified_user

0 Comments: