மட்டக்களப்பு , மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பஸ்தரப்பு நிலையத் திறப்பு விழாவுக்கு எதிப்புத் தெரிவித்து பட்டிருப்பு கிராம மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் களுவாஞ்சிகுடி பிதான வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பஸ்தரிப்பு நிலையத் திறப்பு விழா ஞாயிற்றுக் கிழமை (24) நடைபெற்றது.
இந்நிலையில் இப்புதிய பஸ் தப்பு நிலையம் நிமாணிக்கப்பட்டு பிரதேசம் தமது கிராமத்திற்குச் சொந்தமானது எனத் தெரிவித்து பட்டிருப்பு கிராம மக்கள் பட்டிருப்பு பிள்ளையார் ஆலயத்திலிருது பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக வந்து, அமைதியான முறையில் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிதேச செயலாளரே மௌனம் காட்டாதே, எங்கள் நிலம், உயிர் பறிக்காதே, எமது இருப்பு பட்டிருப்பு, எமது இருப்பை உதிப்படுத்து, பட்டிருப்பு மக்களை ஏமாற்றாதே. ஆமைச்சரே மௌனம் காக்காதே உடனடி தீர்வு எமக்கு வேண்டும், போன்ற வாசகங்க் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வாறுமட்டக்களப்பு – கல்முனை பிதான வீதியில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பஸ்தரிப்பு நிலையம் திப்பு விழாவைத் தடுப்பத்கு முற்பட்ட வேளையில் களுவாஞ்சிகுடி பொலிசார் இஸ்தலத்திற்கு விரைந்து ஆர்ப்பாட்டக்கார்களைக் கட்டுப்படுத்தினர்.
பட்டிருப்பு கிராமத்தின் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் தமது எல்லைப்பகுதிக்குள் அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலையத்திற்கு களுவாஞ்சிகுடியின் பெயர் பொறிக்கப்பட்டதற்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
பஸ்நிலையத்திற்கு முன்பாக கடும் வெயிலுக்கும் மத்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவேளையில் கலகமடக்கும் பொலிஸார் மற்றும் தண்ணீர்புகை செய்யும் இயந்திரங்களும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இருந்த போதிலும் பட்டிருப்பு கிராம மக்களின் பலத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மத்தியில் திறந்து வைக்கப்பட்டுமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment