பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் உப அதிபராகவும் கணித பாட ஆசிரியராகவும் கடமையாற்றிய ஆசிரிய திலகம் செல்வி க.சோமேஸ்வரி அவர்கள் தனது ஆசிரிய சேவையில் இருந்து 10.04.2016 ஓய்வடைகின்றார். அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா நேற்று(07) பாடசாலையில் இடம்பெற்றது.
மேலும், செல்வி க.சோமேஸ்வரி அவர்கள் ஆரம்பக் கல்வியினை மட்.திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியினை மட்.பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்திலும், உயர்கல்வியினை மட்டு வின்சன்ற் உயர்தரப் பாடசாலையிலும் கற்றார். பின்னர் மேற்படிப்பினை பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் கலைமானிப்பட்டத்தினை பெற்றார்.
அவர் முதலாவது சேவையினை தனது ஊரிலே 1993.01.11அன்று கண்டமணி மகா வித்தியாலயத்திலே தனது சேவையினைத் தொடர்ந்தார். பின்னர் 2002.12.31 அன்று மட்.திக்கோடை கணேஷா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்று அங்கிருந்து மீண்டும் 31.12.2008 பழுகாமம் கண்டுமணி வித்தியாலயத்தில் தனது சேவையினை தொடர்ந்து 10.04.2016 ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வடைகின்றார். 23 வருட ஆசிரிய சேவையினை மாணவர்களுக்காக அரிப்பணித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment