மட்.களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற கல்விப் பொதுத்தர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்திய 14 மணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு வியாழக் கிழமை மேற்படி பாடசாலையில் நடைபெற்றது.
மட்.களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பழைய மாணவர்களின் நிதியுதவியின் கீழ் நடைபெற்ற இக் கௌரவிப்பு நிகழ்வில் பாடசாலை அதிபர்.சி.சிவபாதம், பிரதியதிபர் க.சந்திரகுமார். மற்றும், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மேற்படி பரீட்சையில் சித்தியடைந்து இவ்வருடம் கல்விப் பொதுத்தர உயர்தரம் கற்பதற்குத் தெரிவாகியுள்ள 14 மாணவர்களுக்கும் தலா 2200 ரூபாய் வீதம் வங்கியில் வைப்பிடப்பட்டு வங்கிப் புத்தகமும் பரிசில்களும் வழங்கப்பட்டன.
இதன்போது இம்மாணவர்களைக் கற்பித்த ஆசிரியர்களுக்கும், பரிசில்வகள் வழங்கி மட்.களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவர் பாடசாலையின் பழைய மாணவர்களால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மட்களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்று தற்போது கட்டார் நாட்டடில் தொழில் புரிந்து வரும் பழைய மாணவர்களான பேரின்பராசா நந்தகுமார், ஜெகநாதன் அரன், உதயகுமார் சதீஸ்காந் ஆகியோரே இதற்காக நிதியுதவியினை வழங்கியிருந்தனர்.
இவ்வாறான நல்லுள்ளம் படைத்தவர்கள் எதிர் காலத்தில் பலர் உருவாக வேண்டும் எனவும், இவர்ளுக்கு எமது உளமார்ந்த நன்றியறிதலை தெரிவிப்பதாகவும் களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைச் சமூகம் தெரிவிக்கின்றது.
0 Comments:
Post a Comment