8 Apr 2016

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கல்முனையில் “நீரழிவு நோயை கட்டுப்படுத்துவோம்” விழிப்புணர்வு உர்வலம்

SHARE
(டிலா)

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் ஏற்பாடுசெய்த விழிப்புணர்வு உர்வலம் (07.04.2016) கல்முனை நகரில் இடம்பெற்றது. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுத்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கலந்து கொண்டார்.

உலக சுகாதார தினம் ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இம்முறை “நீரழிவு நோயை கட்டுப்படுத்துவோம்” எனும் தொனிப்பொருளில் சுகாதார தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. நாம் அன்றாடம் பலதரப்பட்ட தொழில்களில் ஈடுபடுகின்றோம். எமது தொழிலை சிறப்பாக மேற்கொள்ள சக்தி தேவைப்படுகிறது. இந்த சக்தியை நாம் உண்ணும் உணவிலிருந்து பெறுகின்றோம். இந்த உணவு குளுக்கோசாக மாற்றப்பட்டு இன்சுலினின் செயற்பாட்டின் மூலம் கலங்களுக்குள் செலுத்தப்பட்டு சக்தி பெறப்படுகிறது.

இன்சுலினை சுரக்கும் சதையின் தொழிற்பாடு குறைவடைவதால் இன்சுலின் போதியளவு சுரக்கப்படாத நிலையிலும் இல்லது சுரக்கப்பட்ட இன்சுலின் உடலால் பயன்படுத்த முடியாத சந்தர்ப்பங்களிலும் இரத்தத்தில் சீனியின் அளவு சாதரண மட்டத்தை விட அதிகரிக்கிறது. இதனையே சீனிவியாதி என அழைக்கின்றோம்.
இந்த நீரழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை மாகாண அமைச்சர் பிரதான வீதிஊடாகவும் பஸ்தரிப்பு நிலையத்திலும் பொதுமக்களை சந்தித்து வழங்கிவைத்தார்.

நிகழ்வில் தொற்றாநோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.ஹாரிஸ், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஏ.சி.எம்.பஸால் உட்பட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.




SHARE

Author: verified_user

0 Comments: