6 Apr 2016

கிராமிய சமூக குடிநீர் வழங்கல் திட்டங்களுக்கிடையிலான போட்டியில் வாகரை ஆலங்குளம் சமூக குடிநீர் வழங்கல் தேசிய ரீதியில் தெரிவு

SHARE
தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட கிராமிய சமூக குடிநீர் வழங்கல் திட்டங்களுக்கிடையேயான போட்டியில் மட்டக்களப்பு வாகரைப் பிரதேச சபைக்குட்பட்ட ஆலங்குளம் சனசமூக நிலையத்தினால் நடாத்தப்படும் கிராமிய சமூக குடிநீர் வழங்கல் திட்டம் தேசிய
ரீதியில் மூன்றாவது இடத்தினைப் பெற்றுள்ளதாக வாகரைப் பிரதேச சபை சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. ஹாறூன் தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டு தேசிய நீர் வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சினால் உலக நீர் தினத்தை முன்னிட்டு இத்தெரிவு இடம்பெற்றது. கிழக்கு மாகாண சபையின் ஒத்துழைப்புடன் ஜெய்க்கா நிறுவனத்தின் நிதி அனுசரணையில் வாகரைப்  பிரதேச சபையினூடாக இந்த நீர் விநியோகத் திட்டம் ஆலங்குளம் சனசமூக நிலையத்திற்கு கையளிக்கப்பட்டு இதுவரை அப்பிரதேசத்தில் வாழும் 231 குடும்பங்களுக்கு வீடுகளுக்கான குடிநீர் இணைப்பினை வழங்கி அப்பிரதேசத்தில் நிலவிய குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: