மட்டக்களப்பு ஏறாவூரில் ஆடைத் தொழிற்சாலையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்த போது அந்நிகழ்வில் கிழக்கின் நெற்களஞ்சியம் எனும் சிறப்புக்கமைய ஒரு இலட்சம் அரிசி கொண்டு
ஜனாதிபதியின் முகம் அமைத்து ஓட்டமாவடியைச் சேர்ந்த கலைப்பட்டப் படிப்பு மாணவி முஹம்மத் பாறூக் றம்ஷானி அதனை ஜனாதிபதியிடம் அன்பளிப்புச் செய்தார்.
அந்தக் கலைப் படைப்பைப் புன்முறுவலோடு பெற்றுக் கொண்ட ஜனாதிபதி தொண்டர் கலைஞர் றம்ஷானியைப் பாராட்டினார்.
இதனை வடிவமைக்க மூன்றரை மாத காலம் சென்றதாகவும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு மறு நாள் தான் இந்த கலைப் படைப்பைத் தயாரிக்கத் துவங்கியதாகவும், இலங்கையின் இயற்கை விவசாயக் கொள்கையில் தான் அதிக நாட்டம் கொண்டுள்ளதாகவும் றம்ஷானி தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment