குடி நீருக்காக பெரும் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வந்த மட்டக்களப்பு வவுணதீவு மண்டபத்தடி கிராமத்திற்கு குழாய் நீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் (2015) இக்கிராமத்தில் குடிநீர்ப் பிரச்சினை ஏற்பட்ட போது அங்கு நேரில் சென்று பார்வையிட்ட மட்டக்களப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் வவுணதீவு பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு தற்காலிக நீர்த் தாங்கிகளை வைத்து குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.
அதேவேளை இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்குமாறு உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதற்கமைவாக தற்போது மண்டபத்தடி கிராமத்திற்கான குழாய் நீர் விநியோகத் திட்ட வேலைகள் துவங்கியுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் குழாய் நீர் விநியோக வேலைத் திட்டங்களை புதன்கிழமை 06.04.2016 நேரில் சென்று பார்வையிட்டார்.
அரச ஊழியர்களின் அர்ப்பணிப்புடனும் பிரதேச பிரதேச இளைஞர்களின் அயராத உழைப்புடனும் கிராம மக்கள் இணைந்து நீர்க் குழாய் பதிப்பதற்கான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
வேலைகள் நிறைவடைந்தவுடன் வெகுவிரைவில் குழாய் நீர் விநியோகம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment