மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு-கொழும்பு கொம்மாதுறை பிரதான வீதியில் வயோதிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளால் மோதுண்டதில் படுகாயமடைந்து
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை காலையில் இவ்விபத்து நேர்ந்தது.
கொம்மாதுறை எம்.பி.கே. வீதியைச் சேர்ந்த எஸ். பத்மநாதன் (வயது 76) என்பரே உடம்பில் முறிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் முன்னதாக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த முதியவர் வீதியைக் கடக்க முற்பட்டபோது வேகமாக வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் இவரை மோதியுள்ளது. அவ்வேளையில் முதியவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment