2 Mar 2016

கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்திற்கு விசேட உள்ளீர்ப்பு

SHARE
விசேட உள்ளீர்ப்பின் கீழ் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்திற்கு அனுமதி பெற்ற  மாணவர்களினது பதிவு நடவடிக்கைகள் எதிர்வரும் 13.03.2016 காலை 9.00 மணியிலிருந்து ஆரம்பமாகும் என கிழக்குப் பல்கலைக்கழக பதில் பதிவாளர் அ.பகீரதன் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யக் கோரிய அனைத்து மாணவர்களுக்கும் நாளைய தினம் வியாழக்கிழமை (03) வருகை தருமாறு அறிவித்தல் விடுத்திருந்தது.

இந்த நிலையில் பதிவுகளுக்கான நாளை 13ஆம் திகதியாக மாற்றியுள்ளதாக பதில் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விசேட உள்ளீர்ப்பின் கீழ் 320 புதிய மாணவர்கள் கலை கலாசார பீடத்திற்கு சேர்த்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: