வரலாறு தமிழர்களுக்கு மிக முக்கியமான
பாடங்களை புகட்டி சென்றுள்ளது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்ததன்
விளைவாகவே நாம் "மஹிந்த ராஜபக்ச" எனும் யுகத்துக்குள் தள்ளப்பட்டோம்.
இதற்குள் இருந்து மீண்டுவர எமக்கு பத்து வருடங்கள் வரை எடுத்தன.
என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு
வவுணதீவு பிரதேச சபைக்கு உட்பட்ட பனையாறுப்பான்
கிராமத்தில் இடம்பெற்ற ஞாயிற்றுக் கிழமை
(20) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த அவர்....
வாக்குப்பலத்தின் வலிமையினை தமிழர்கள்
சரிவர புரிந்து ஒவ்வொரு தேர்தலிலும் தவறாது வாக்களிக்க வேண்டும். அன்று
வாக்களிக்காது விட்டதால் தவறான தலைமைத்துவத்துக்குள் சிக்குண்டோம்> பின்னர் தவறை உணர்ந்து வாக்களித்ததால் நமக்குரிய வேறு ஒரு
தலைமைத்துவத்தை அடைந்துள்ளோம். இது நிலையாக இருக்க வேண்டுமாயின் எமக்கே
உரித்தான வாக்குப் பலத்தினை சரி வர பயன்படுத்த வேண்டும்.
ஏனைய சமுகங்களுடன் ஒப்பிடும் போது எமது தமிழ் மக்களின்
வாக்களிப்பு வீதம் மிக மிக குறைவாகவே உள்ளது. பட்டி>
தொட்டி> மூலை> முடுக்கு என எங்கு வாழ்ந்தாலும் வாக்களித்தே ஆக வேண்டும். மற்றைய
இனங்கள் எம்மை விட மிக உயர்ந்தளவான வாக்களிப்பு வீதத்தினை கொண்டுள்ளமையால் எமக்கு
இலகுவாக கிடைக்கக் கூடிய பிரதிநிதித்துவங்களையும் இழக்க நேரிடுகிறது.எமக்கான
பிரதிநிதிகளை நாம் தான் தெரிவுசெய்து கொள்ள வேண்டும் ஆதலால் நாம் வாக்களித்தால்
தான் அது சாத்தியமாகும்.
இனி உள்ளூராட்சித் தேர்தல்கள் வருகின்றன குறித்த பிரதேசங்களில்
இருந்து பொருத்தமான பிரதிநிதிகளை தெரிவு செய்து கொள்ளுங்கள். அவர்களால் தான்
அந்தந்த பிரதேசத்துக்குள் காணப்படும் தேவைகளை இலகுவாக இனங்கானவும்> துரிதமான அபிவிருத்திகளை மேற்கொள்ளவும் முடியும்.
தமிழர்கள் தமக்குரிய தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்கும் பண்பினை
வளர்த்துக்கொள்ள வேண்டும். சிங்கள சகோதரர்கள் எமது தமிழ் கட்சிகளுக்கு
வாக்களிப்பதில்லை அதே போல் முஸ்லிம் சகோதரர்கள் தமிழ் கட்சிகளுக்கு வாக்களிப்பதில்லை
ஆனால் தமிழர்கள் தான் ஏனைய இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் இனவாரியான
கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள். இந்த பாரம்பரியத்தை எமது வாக்காளர்கள்
மாற்றிக்கொள்ள வேண்டும். இது இனரீதியான பிளவினை ஊக்குவிக்கும் கருத்தல்ல ஏனைய
இனங்களைப் போல் நாமும் எமக்கே உரித்தான உரிமைகளை உறுதிசெய்ய வேண்டும் என்பதற்காகவே
கூறுகிறேன்.
தமிழர்களுக்குள் ஒற்றுமை
வேண்டும். எமக்குள் சாதிவேறுபாடுகள்>
மத வேறுபாடுகள்> பிரதேச வேறுபாடுகள் எம்மிடையே இருக்கக் கூடாது. கடந்த காலங்களில்
பிரிவினைகளால் பல கசப்பான படிப்பினைகளை அனுபவித்து வந்துள்ளோம். பல இலட்சக்கணக்கான
உறவுகளை இழந்தோம்> பலர் கடத்தப்பட்டார்கள்>
சிறையில் அடைக்கப்பட்டார்கள்> காணாமல் ஆக்கப்பட்டார்கள் இவையெல்லாம்
நாம் ஒற்றுமை இழந்து>பலமிழந்து போனதன் விளைவே ஆகும். நாம் ஒற்றுமைப்பட்ட வேளையெல்லாம்
நாம் வெற்றி பெற்றிருக்கிறோம்>
பிளவடைந்த போதெல்லாம் தோற்றே போயிருக்கிறோம். அது கட்சியாக இருந்தாலும் சரி இயக்கமாக
இருந்தாலும் சரி என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment