மட்டக்களப்பு - தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு புதன் கிழமை (16) எண்ணைக்காப்புச் சாத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது
பக்தர்கள் மூலமூர்த்தியாகிய பிள்ளையாருக்கும், ஏனைய பரிபாரத் தெய்வங்களுக்கும், எண்ணைக்காப்புச் சாத்தி வழிபட்டனர்.
64 அடி உயரம் கொண்ட இலங்கையின் முதலாவது விநாயகர் சிலை உருவத்துடன் கூடிய சுதை விக்கிரக இராஜகோபுரத்தைக் கொண்டமைந்த இவ்வாலயத்தில் பல சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய ஆலயமாக இது விளங்குகின்றது.
இவ்வலயத்தில் 12 இராசிகள், கீதாசாரம், மாகாபாரதம், கொம்புமுறி, ரிசப குஞ்சம், அன்னப்பறவையின் ஒற்றுமை, போன்ற பல சித்திர வேலைப்பாடுகளும்,
63 நாயன்மார்கள், 4 சமய குரவர்கள், 18 சித்தர்கள், மற்றும், சந்தான குரவர்கள், போன்றோரின் ஊருவங்கள், 32 வடிவங்களில் அமைந்த புடைச்சிற்பங்கள், புராண இதிகாசக் கதைகளடங்கிய சிற்ப வேலைப்பாடுகள், என்பவற்றோடு 41 அடி உயரம் கொண்ட திரிதள விமானமும் அமையப்பெற்றுள்ளன.
நாகதம்பிரான், கிருஷ்ணர், லிங்கேஸ்வரர், சிவன், பார்வதி, முருகன், வைரவர், ஆஞ்சநேயர், மற்றும், நவக்கிரக ஆலயம் , போன்ற பரிபாரத் தெய்வங்களும் அமைந்துள்ளன.
கர்ப்பக்கிரகம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், யாகசால, வசந்தமண்டபம், நிருத்தமண்டபம், தம்பமண்டபம், சுற்றுப்பிரகாசம், என்பன ஒருங்கே அமையப்பெற்றுள்ளதோடு, நாகர, வேஸர, திராவிட ஆகிய பாணிகளில் ஆலய தூண்கள் அமைந்துள்ளன.
இவ்வாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (11) சங்காபிஷேகம், நடைபெற்று, திங்கட் கிழமை (14) கர்மாரம்பமும், புதன் கிழமை எண்ணைக்காப்பும் இடம்பெற்றது. எதிர் வரும் வெள்ளிக் கிழமை (18) கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.
ஆலய பரிபாலனசபைத் தலைவர் த.விமலானந்தராசா தலைமையில் இடம்பெறும் இவ்வாலய கிரியைகளை சிவ ஸ்ரீ சீத்தாராம் குழுக்கள் மற்றும், வடஇந்திய இராமேஸ்வரம் ஆலயத்தின் பரம்பரை அச்சகர் சிவ ஸ்ரீ சிவராஜன், ஆகியோரின் தலைமையில் நடைபெறுகின்றன.
0 Comments:
Post a Comment