17 Mar 2016

தரிசு நிலங்களின் பயன்பாடு தொடர்பான கலந்துரையாடல்

SHARE
திருகோணமலை மாவட்டத்தில் பயன்படுத்தப்படாத நிலையிலுள்ள தரிசு நிலங்களில் எவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களை
மேற்கொள்ள முடியும் என்பது தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் புதன்கிழமை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார வின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் பிரதம ஆலோசகராகக் கலந்து கொண்டார்.

அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கும்போது கடந்த ஜனவரி மாதம் இடம் பெற்ற முதலீட்டாளர் மாநாட்டினை தொடர்ந்து கிழக்குக்கு அதிக முதலீடுகளை மேற்கொள்ள வழி பிறந்துள்ளது.

எனவே, அதற்கேற்றவாறு கிழக்கு மாகாணத்திலுள்ள வளங்களை இனங்கண்டு முதலீட்டாளர்களுக்கு தேவையான புதிய திட்டங்களை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தகைய முதலீட்டுத் திட்டங்களின் மூலம் இளைஞர் யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கவும் வழியேற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தினை மனித வளமும், இயற்கை வளங்களும் நிறைந்த செழிப்பான பிரதேசமாகவும் அபிவிருத்தி அடைந்த மாகாணமாகவும் மாற்றுவதே புதிய முதலீட்டுத் திட்டத்தின் நோக்கமாகும் என்றார்.
இக்கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலக செயலாளர்களும் கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: