மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த புதிய காத்தான்குடி -06, நூராணியா மையவாடி வீதியைச் சேர்ந்த காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் தரம் 9 இல் கல்வி கற்று வந்த எம்.ரீ.எம். முஸ்தாக் (வயது 14) சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை 03.03.2016 அதிகாலை 4 மணியளவில் மரணித்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த (27.02.2016) சனிக்கிழமை புதிய காத்தான்குடி ஹொஸ்டல் வீதி, இண்டாம் ஒழுங்கையில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.
வீதியில் சென்ற சிறுவர்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 7, 12, 13 வயதுடைய மூன்று சிறுவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடிருந்தனர். இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளர்.

0 Comments:
Post a Comment