15 Mar 2016

அவசரகால தடைச்சட்டம் நீங்கப்பட்ட போதும் ஆட்பதிவு மேற்கொள்ளப்படுகின்றது.

SHARE
அவசரகால தடைச்சட்டம் நீங்கப்பட்ட போதும் அச்சட்டத்தின் பால் பாவிக்கப்பட்ட ஆட்பதிவு படிவங்களைக் பாவித்து நகர் பகுதிகளில் ஆட்பதிவு மேற்கொள்ளப்படுகின்றது. இந்த நல்லாட்சிக்கு பொருத்தமற்றது என கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா
இந்திரகுமார் தெரிவித்தார்.மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு மகா விதியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி அதிபர் திருமதி ஆர்.திரவியராஜா தலைமையில் நடை ஏழு வருடங்களுக்குப் பின்னர் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் பொதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

இந்தப் பாடசாலை ஒரு 1ஏவீ பாடசாலை ஏழு வருடங்களாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை இதற்கான காரணம் ஒழுங்கான மைதானம்  இல்லை என்பது மிகவும் வேதனையளிக்கின்றது. எங்களுடைய மாணவர்களுடைய கல்வி வளர்சியில் உடற்பயிற்சியும் உடலாரோக்கியமும் முக்கியமாக அமைகின்றது என்பதனை மக்கள் பிதிநிதியாகிய அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எங்களுடைய சமூகம் வருங்காலங்களில் தொற்றா நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதாயின் பாடசாலை மணவரிடத்தே விளையாட்டு என்பது முக்கியமாக கொள்ளப்பட வேண்டிய காலகட்டமிது இதனால் இந்த பாடசாலைக்கு மைதானம் ஒன்றின் தேவை மிக முக்கியமானது.
கடந்த கால ஆட்சியிலே எங்களுடைய பிரதேசங்களுக்கு எல்லாம் ஒதுக்கப்பட்ட நிதிகள்  சின்னாபின்னமாக எந்தவித பிரயோசனம்மின்றி தங்களின் கட்சி நலனுக்காக, தங்களுக்கு வேண்டியர்களுக்க ஒதுக்கப்பட்டது. 

அந்த வகையில் இங்கு ஓர் விடயத்தினை நாங்கள் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது மட்டக்களப்பு நகரிலே தனிப்பட்ட ஒரு கழகத்திற்காக அதி கூடிய நிதியாக பத்து லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சில் அடங்கியுள்ள விளையாட்டுத்துறை  அமைச்சின் ஊடாக இந் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பாடசாலைக்கு குறித்த நிதியானது வந்தடைந்திருந்தால் இந்த பாடசாலை மாணவர்கள் எவ்வளவு பிரயோசனம் அடைந்திருப்பார்கள். இதனை நினைக்கும் போது எம் மாணவர்களின் நலனில் அக்கறையின்றி செயற்படுவபர்களை எண்ணி வேதையடைய வேண்டியுள்ளது. இதற்காகத்தான் நான் கூறுகின்றேன், உங்களின் மண்ணின் மைந்தனாக இருக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நடராசா அண்ணன் ஊடாக இப் பாடசாலை மைதானத்தின் தேவைக்கான கோரிக்கை கடித்தினை கல்வி அமைச்சருக்கு அனுப்பிவையுங்கள். அதனை பெறுவதற்கு மாகாண சபையிலே நாங்கள் பக்க பலமாக நிப்போம். 
தனிநபரின் கழகத்திற்கு பத்துலட்சம் ரூபாய் ஒதுக்க முடியுமாக இருந்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணர்கள் கல்வி பயிலும் இந்த பாடசாலைச் சமூகத்தின் எதிர்கால நன்மை கருதி மாணவருக்காக, இதுபோன்ற மைதானங்களுக்கு ஏன் கல்வி அமைச்சரால் நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது
ஆட்சி மாற்றத்திலும் தற்போது ஆட்பதிவுகளை பொலிசார் மேற்கொள்கின்றனர் இதனால் எமது மக்கள் பீதிநிலையில் உள்ளார்கள் அவசரகாலச் சட்டம் இல்லை என்று சொல்லி விட்டு  அச்சட்டத்திற்குள்ளான படிவங்களை கொடுத்து பதிவினை மேற்கொள்கின்றனர். 

வெளிநாட்டிலே வசிக்கின்ற எமது புலம்பெயர் உறவுகளை இந்த அரசாங்கம் இங்கு வரச்சொல்;லிவிட்டு நகரத்தில் உள்ளவர்களை பதிவு செய்வதனால் வருகை தந்தவர்கள் மீண்டு நாடுகளுக்குச் செல்வதற்கு வழிவகுக்கின்றது. எனவே இது போன்ற மக்களை அச்சத்திற்குள்ளாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்

SHARE

Author: verified_user

0 Comments: