15 Mar 2016

ஒழுக்காற்று நடவடிக்கைகளின் பின்னர் கி.ப.க.திருகோணமலை வளாக சித்த மருத்துவபீடம் இயங்கும்-உபவேந்தர்

SHARE
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக சித்த மருத்துவபீட மாணவர்கள் சிலர் கடந்த வியாழக்கிழமை இரவு தாக்குதலுக்குள்ளானமை பற்றி முழுமையான ஒழுக்காற்று விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒழுக்காற்று விசாரணை முடிந்ததும் சித்த மருத்துவபீடம் இயங்கத் தொடங்கும் என கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் கலாநிதி ரீ. ஜயசிங்கம் தெரிவித்தார்.

அங்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் தொடர்பில் முழுமையான ஒழுக்காற்று விசாணை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: