3 Mar 2016

உற்பத்தித்திறன் மிக்க அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு மடிக்கணணிகள்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலக ரீதியில் கடமையாற்றும் உற்பத்தித்திறன் மிக்க அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு மடிக்கணணிகள் நேற்று (01) வழங்கி வைக்கப்பட்டன.
உற்பத்தித்திறன் செயலகமும், மட்டக்களப்பு மாவட்ட செலயகமும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இந்த மடிக்கணணிகளை மாவட்ட செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதேச செயலாளர்களிடம் கையளித்தார்.

மாவட்ட உற்பத்தித்திறன் செயலக இணைப்பாளர் பி.புவனேந்திரன் தலைமையில் மாவட்ட செலயக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் உற்பத்தித்திறன் நடவடிக்கைகளை மேம்படுத்தும் பொருட்டு 15 மடிக்கணணிகளும், புறெஜெக்ரர்கள் இரண்டும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
Batti ds laptop
SHARE

Author: verified_user

0 Comments: