11 Mar 2016

அண்மைக்காலமாக தேசியமட்ட விளையாட்டுக்களுக்கு தெரிவாகும் மாணவர்களின் தொகை எமது கல்வி வலயத்தில் அதிகரித்துள்ளது பி.க.ப. மா.உலககேஸ்பரம்

SHARE
அண்மைக்காலமா தேசியமட்ட விளையாட்டுக் களுக்கு  தெரிவாகும் மாணவர்களின் தொகை எமது கல்வி வலயத்தில் அதிகரித்துள்ளது. என பட்டிருப்புக் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மா.உலககேஸ்பரம் அவர்கள் தெரிவித்தார்.

எருவில் கண்ணகி மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி அதிபர் எஸ்.பரமானந்தம் தலைமையில் நடைபெற்றது இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

விளையாட்டுகள் இந்துடன் நடந்து முடிந்ததாக மாணவர்கள் கருதக்கூடாது நாங்கள் வலயமட்டம், மாகாண மட்டம், தேசிய மட்டம் வரை உங்களுடைய ஆற்றல்களை வெளிக்கொணரப்படும் போதுதான் இந்த விளையாட்டுக்களின் மகத்துவத்தை உணரக்கூடியதாக இருக்கும்.

குறிப்பாக இணைப்பாடவிதானமான கொள்ளப்படும் விளையாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக  கிழக்கு மாகாணத்தில் முதலிடத்தை எமது கல்வி வலயம் வகித்துக் கொண்டு இருக்கின்றது.  எமது மாணவர்கள் விளையாட்டில் காட்டிற்கும் ஆர்வமும் ஆசிரியர்களினது அற்பணிப்பான சேவைகளுமே இதற்கு காரணமாக அமைகின்றது. அந்த வகையில் தேசியமட்டத்தில் போட்டி போடுகின்ற மாணவர்களின் தொகையும் கடந்த காலங்களில் எமது வலயத்தில் அதிகரித்துக் கொண்டு வருகின்றது.

விளையாட்டு என்பது மாணவர்களை பொறுத்தளவில் கல்வியின் மறுபக்கமா நாங்கள் பார்த்து கொண்டு இருக்கின்றோம். இதில் மாணவர்களின் திறங்கள் மாத்திரமல்ல நல்ல பண்புகளும் இதன்போது வளர்க்கப்படுகின்றது இது  எதிர்காலத்தில் மாணர்களின் சிறந்த வாழ்க்கையை பிரதிபலிப்பதாக அமைகின்றது.

ஒரு பாடசாலையின் அபிவிருத்தி என்பது அந்தப்பாடசாலை சமூகத்துடன் கொண்டிருக்கின்ற உறவினை பிரதிபலிப்பதாக அமைகின்றது. அந்த வகையில் இந்த பாடசாலையின் வளர்ச்சியிலும் இந்த சமூகத்தின் பங்களிப்பு அதன் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்பவையாக அமைந்தள்ளமை போற்றுதற்குரியது, என அவர் இதன் போது தெரிவித்தார்….
SHARE

Author: verified_user

0 Comments: