11 Mar 2016

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதி கூடிய வருமானத்தினைப் பெறும் மதுபான சாலை படுவான்கரைப் பிரதேசத்தில் இதுவரை எந்தவொரு பெண்கள் அமைப்புக்களும் குரல் கொடுக்கவில்லை? மகளீர் தின உரையில் பிரதேச செயலாளர் சத்தியானந்தி கேள்வி

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதி கூடிய வருமானத்தினைப் பெறும் மதுபான சாலைகளாக படுவான்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள மதுபான சாலைகள் காணப்படுகின்றது, ஆனால் அதற்கு எதிராக இதுவரை எந்தவொரு பெண்கள் அமைப்புக்களும் குரல் கொடுக்கவில்லை என இந்த சர்வதேச தின
நாளில் கூறிவைக்க விரும்புகின்றேன் என  பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி அவர்கள் தெரிவித்தார்.

சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு சக்தி மகளீர் இல்லம் ஏற்பாடு
மட்டக்களப்பு மாவட்டத்தில் பலதரப்பட்ட மதுபான சாலைகள் அமைந்துள்ள போதிலும் படுவான்கரை பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு மதுபான சாலைகளே இன்று கூடுதலான வருமானத்தினை ஈட்டுகின்ற மதுபான சாலைகளாக காணப்படுகின்றது, இந் நிலையில் இப் பிரதேசத்தில் அமைந்துள்ள பெண்கள் அமைப்புக்கள் வெவ்வேறு பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கின்ற  போதும் இதற்கு எதிராக எந்தவொரு பெண்கள் சங்கமோ, அமைப்புக்களோ இதனை பற்றி சிந்தித்ததில்லை குரல் கொடுத்ததுமில்லை. மாறாக இந்த அபை;புகள் வேறு வேலைகளில் கூடுதலான கவனத்தினைச் செலுத்தி வருகின்றது, அதாவது  சிறுகடன் பெறுதல், மற்றும் ஒப்பந்த வேலைகள்; செய்தல் போன்ற செயற்பாடுகளிலையே கூடதலான கவனத்தினைச் செலுத்திவருவதனை அவதானிக்க முடிகின்றது.

இது மாத்திரமின்றி இன்று பெண்கள் தங்களது பிள்ளைகளுக்கு பூரணமான உணவினை வழங்க முன்வரவேண்டும். பலதரப்பட்ட தயாரிக்கப்பட்ட செயற்கையான உணவுகள் தற்பொழுது வலம் வந்து கொண்டிருக்கின்றது, அதனை வாங்கி உங்கள் பிள்ளைகளுக்கு வழங்குவதை இயன்றளவு தவிர்த்துக் கொள்ள வேண்டும். இயன்றளவு உள்ளுர் உற்பத்தியில் கவனஞ் செலுத்த வேண்டும், பெண்கள் இந்த விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். உங்களால் முடிந்தவரை வீட்டில் சில தானிய வகைகளை உற்பத்தி செய்வதற்கு முயற்சியுங்கள்,  குடும்பத்தினை வழிநடாத்தக் கூடிய பக்குவம் பெண்களில் தான் தங்கியுள்ளது.

எனது தந்தையின் வருமானம் போதாமல் இருந்த போது எங்களது தாய்தான் அதனை சமாளிப்பதற்கு   வீட்டுத் தோட்டம் செய்வதில் ஈடுபட்டு குடும்பத்தினை  வெற்றிகரமாக வழிநாடத்தி எங்ளை கற்பித்து ஆளாக்கினார் இதனை ஒவ்வொருதாயும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். என அவர் இதன் போது தெரிவித்தார்.

செய்திருந்த மகளிர் தின நிகழ்வு அரசடித்தீவு சக்தி இல்ல ஒன்று கூடல் மண்டபத்தில் செல்வி.பு.கோபிகா தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: