11 Mar 2016

கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச மட்ட விளையாட்டு விழாவில் வின்னர் விளையாட்டுக் கழகம் சம்பியன்

SHARE
(டிலா)

கல்முனை (பிரிவு) தமிழ்ப் பிரதேச செயலகத்தின் பிரதேச மட்ட விளையாட்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வு (10.03.2016) பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் சேனைக்குடியிருப்பு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இறுதி நாளான இன்று பெண்களுக்கான கிரிக்கட், ஆண்களுக்கான கிரிக்கட் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.
கிரிக்கட் போட்டியில் (ஆண்கள்) டெல்பின் வி.கழகமும், பெண்கள் பிரிவில் வின்னர் வி.கழகமும் வெற்றிபெற்றுக் கொண்டது. உதைபந்hதாட்டப் போட்டியில் துளிர் வி.க, எல்லே-போட்டியில் (ஆண்கள்)-லக்கிஸ்டார் வி.க (பெண்கள்)-வின்னர் வி.க, கரைப்பந்து-எவரடி வி.கழகமும் சம்பியன் கிண்ணத்தை பெற்றுக் கொண்டது. வெற்றிபெற்ற அணிகளுக்கு கலந்து கொண்ட அதிதிகள் வெற்றிக்கிண்ணங்களை வழங்கி கௌரவித்தனர்.

சகல போட்டிகளிலும் திறமையை வெளிக்காட்டி வின்னர் வி.கழகம் 2016ம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் சம்பியன் கிண்ணத்தை பெற்றுக் கெண்டது. பிரதேச செயலாளர் கே.லவநாதன்,; மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் பி.ராஜகுலேந்திரன், விளையாட்டு உத்தியோகத்தர் எம்.பி.எம்.ரஜாய் மற்றும் பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



















SHARE

Author: verified_user

0 Comments: