15 Mar 2016

பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களின் உதவியே நான் பட்டப்படிப்பினை தொடர காரணம் - மாணவி டி.ஜெயகிருஸ்டி.

SHARE

பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களின் உதவியே நான் பட்டப்படிப்பினை தொடர காரணம்இந்த நேரத்தில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்என்னைப்போல் பல இளைஞர்யுவதிகளுக்கு வாழ்வாதாரத்திற்கான வழியை அமைத்து தந்துள்ளீர்கள்நாங்கள் உங்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளோம்நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என தையல் பயிற்சியை முடித்து சுயதொழில் மூலம்வருமானம் ஈட்டும் மாணவி டி.ஜெயகிருஸ்டி குறிப்பிட்டார்.
மட்டு,கிரான் பிரதேசத்தில் தையல் பயிற்சியினை பூர்த்தி செய்த யுவதிகளுக்கு தையல்  இயந்திரம் வழங்கும் வைபவம்  செவ்வாய் கிழமை (15) கிரான் ரெஜீன் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றதுகிராமிய பொருளாதார அலுவல் பிரதி அமைச்சரின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஜோன் பாஸ்டர்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம கலந்து கொண்டார். 

நான் இப்போது பட்டப்படிப்பினை மேற்கொள்கிறேன்என் கல்விக்கான எல்லா செலவுகளையும் நான் இந்த சுயதொழில் மூலம் ஈட்டும் வருமானத்தின் ஊடாகவே நிறைவு செய்கிறேன்இதற்கு முக்கிய காரணம் பிரதி அமைச்சர் அமீர் அலி ஐயா அவர்கள் தான்அவருடைய இந்த இன,மதம் கடந்த சேவை தொடர்ந்தும் இந்த பிரதேசத்திற்கு கட்டாயம் தேவைஇறைவன் எமக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே அவரை இணங்காட்டியுள்ளான்.



சுயதொழில் மூலம் வருமானம் பெற்று எனது பட்டப்படிப்பை நான் மேற்கொள்கிறேன்என்னைப்போலவே பலர் அமைச்சரின் மூலம் வாழ்வாதாரத்தை பெற்றுள்ளோம்என அவர் தெரிவித்தார்.










SHARE

Author: verified_user

0 Comments: