15 Mar 2016

கூட்டுறவு நூலகம் திறந்து வைப்பு திறந்து வைப்பு

SHARE
மட்டக்களப்பு கூட்டுறவு உதவி ஆணையாளர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நூலகத் திறப்பு நிகழ்வு திங்கட் கிழமை (14) கூட்டுறவுத் திணைக்கள ஆணையாளர் திவாகரசர்மா தலைமையில் கல்லடியில் அமைந்துள்ள கூட்டுறவுஉதவி ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்குமாகாண கூட்டுறவுத்துறை அமைச்சர். கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் கிழக்கு மாகாணசபைப் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபைஉறுப்பினர்களான கோவிந்தம் கருணாகரம், மார்க்கண்டு நடராசா, மாகாணவிவசாய அமைச்சின் செயலாளர் எஸ்.சிவநாதன் மற்றும் கூட்டுறவு உதவிஆணையாளர், கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது கூட்டுறவுத் திணைக்களத்தின் மூன்று மில்லியன் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட கூட்டுறவு நூலகம் திறந்துவைக்கப்பட்டது. 

SHARE

Author: verified_user

0 Comments: