15 Mar 2016

சீனா - இலங்கை நாடுகளுகள் சிறுநீரக நோய் தொடர்பாக ஆய்வு

SHARE
(அஷ்ரப் ஏ சமத்)


சீனா - இலங்கை நாடுகளுகள்  இணைந்து  இலங்கையில் தற்பொழுது சில மாவட்டங்களில்  பொதுமக்கள் வெகுவாக சிறுநீரக நோய்க்கு ஆளாக்கப்பட்டு வருவதனை ஆரய்ந்து அதற்கான நிவாரண நடவடிக்கை எடுக்க உள்ளனா்.  இவ் விடயம்  சம்பந்தமாக இலங்கை சீனா நாடுகளின்  விஞ்ஞானிகள். வைத்திய பேராசியா்கள், விவசாய ஆரய்ச்சி பேராசிரியா்கள்  கொண்ட , பயிற்சிப் பட்டரை இன்று (15) ஆம் திகதி காலை 08.00 - பி.பகல்  06.00  மணிவரை   நகர அபிவிருத்தி நீர்விநியோக வடிகாலமைப்பு அமைச்சா் ரவுப் ஹக்கீம் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்ப்டடது.
இச் செயலமா்வில் நீர்விநியோக வடிகாலமைப்பு சபையின்  உயா் அதிகாரிகள், பல்கலைக்கழக பேராசிரியா்கள், சுகாதார அமைச்சின் வைத்திய நிபுணத்துவா்கள்  சீன நாட்டைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், வைத்தியா்கள் ஆராய்ச்சியாளா்களும் இம் மாநாட்டில்  கலந்து கொண்டுள்ளனா்.


பிற்பகல்  நடைபெறும் செயலமா்வில் பதில் சுகாதார அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனா பிரதம அதிதி்யாகக் கலந்து கொள்ள உள்ளாா். 


SHARE

Author: verified_user

0 Comments: