கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் சுமார் 15-20 வருடங்களாக வேதனமின்றிக் கடமையாற்றுவோர் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கொரி விவரங்களைக் கையளித்துள்ளனர்.திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் செயலகத்தில் புதன்கிழமை 16.03.2016 இடம்பெற்ற சந்திப்பில் தொண்டராசிரியர்கள் இந்த விவரத் திரட்டை முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் இடம் கையளித்தனர்.
கடந்த கால யுத்தம், சுனாமி, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை செயற்கை இடர்களின்போதும் தாங்கள் எதுவித வேதனமும் இல்லாமல் ஆசிரியர் பற்றாக்குறை நிலவிய கஷ்டப்பிரதேசங்களிலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியிருந்த போதும் தங்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கப் பெறாதது கவலையளிப்பதாக தொண்டராசிரியர்கள் முதலமைச்சரிடம் சுட்டிக் காட்டினர்.
இதன் போது கருத்து தெரிவித்த முதலமைச்சர் தான் முதலமைச்சராக பதவியேற்ற காலம் தொட்டு இன்றுவரை பல்வேறுபட்ட பிரச்சினைகளை சந்தித்து அதற்கான தீர்வினையும் பெற்றுக்கொடுத்து கொண்டிருக்கும் இந்நிலையில் இத்தொணடராசிரியர்களின் நிலையினை அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர். துரைரெத்தினம், ஆர்.எம். அன்வர் மற்றும் தொண்டர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment