22 Feb 2016

கிழக்கின் இளைஞர் முன்னணியின் (க.பொ.த) சாதாரண தர மாணவர்களிற்கான இலவச கல்விக் கருத்தரங்கு.

SHARE

(பழுவூரான்)
ஓர் சமூகத்தின் உண்மையான வளர்ச்சியானது அச் சமூகம் கல்வியில் வளரச்சியடைவதன் மூலமே அடையமுடியும். கல்வி வளர்ச்சியடையும் போது புறக்கணிப்புக்கள் தடுக்கப்பட்டு தானாகவே தனித்துவமான ஓர் அடையாளத்தைப் பெறமுடியும் அதனை அடிப்படையாக கொண்டு 'கல்வியில் புரட்சி செய்து எம் தமிழ் சமூகத்தின் நிலையினை உயர்த்திடும் உன்னத முயற்சி' எனும் தொனிப்பொருளில் கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத்தின் திட்டமிடலுக்கு அமைய படுவான்கரை பிரதேசங்களில் காணப்படும் மாணவர்களின் (க.பொ.த) சாதாரண தர பரீட்சைத்  தேர்ச்சி மட்டத்தை அதிகரிக்கும் நோக்கத்தின் அடிப்படையில் 2016ம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களிற்கான இலவச கல்விக் கருத்தரங்கு 20.01.2016, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில்  நடைபெற்றிருந்தது. இன்றைய தினம் வரலாறு பாடத்திற்கான விரிவுரை குருமண்வெளியினை சேர்ந்த முன்னணியின் உறுப்பினரும்  ஆசிரியருமான செந்தில்நாதன் டிலோஜன் அவர்களாலும், கணிதப்பாடத்திற்கான விரிவுரைகள்  களுவாஞ்சிகுடியினைச் சேர்ந்த பிரபல கணித ஆசிரியரும் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகருமான கணிதக்கனி கிருஸ்ணபிள்ளை ஆசிரியரினால் மட்-பட்-வெல்லாவளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இவ் கருத்தரங்கில் படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள பல பாடசாலைகளில் இருந்தும் 150 ற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். அத்துடன் இவ் கருத்தரங்கு தொடர் கருத்தரங்காக நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக  முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத் தெரிவித்திருந்தார்.

 






SHARE

Author: verified_user

0 Comments: