
கிழக்கின் இளைஞர் முன்னணி அமைப்பின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத்தின் திட்மிடலின் கீழ் இன்று(22.02.2016) காலை 8.30
மணிமுதல் பிற்பகல் 12.00 மணிவரை களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் இரத்த தான வைபவம் இடம் பெற்றிருந்தது. இதில் ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் திரு.கு.சுகுணன் ஆரம்பித்து வைத்திருந்தார். ஆரம்பித்து வைத்து பேசுகையில் கிழக்கின் இளைஞர் முன்னணி அமைப்பினர் தானாக முன்வந்து இவ் சேவையினை செய்கின்றனர், இச் சேவை விலைமதிப்பிட முடியாத சேவை, இதனை இத்துடன் நிறுத்தி விடாமல் ஆண்டுதோறும் தொடர்ந்து நடாத்த வேங்டும் எனவும் கூறியிருந்தார். இவ்வாறு பல சேவைகளை இவ் அமைப்பினர் செய்ய வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார், அத்துடன் தொடர்ந்து கிழக்கின் இளைஞர் முன்னணி அமைப்பின் சேவைகளில் இணைந்து செயற்படுவேன் எனவும் கூறியிருந்தார்.
இவ் இரத்த தான வைபவத்தில் முன்னணியின் உறுப்பினர்கள் பலர் பங்குபற்றியதுடன் தங்கள் பிரதேசத்தில் உள்ள ஆர்வம் உள்ளவர்களையும் பங்கேற்கச் செய்திருந்தனர்.இது தொடர்பாக கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவர் கூறுகையில் எமது முன்னணியானது கல்வி, கலை, சுகாதாரம், ஆன்மீகம் போன்ற பல துறைகளிலும் சேவைகளை திட்டமிட்டு செய்து வருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் பற்றாக்குறை
நிலவுவதனால் அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு இவ் இரத்த தான வைபவத்தினை ஏற்பாடு செய்திருந்தோம். அதனடிப்படையில் எமது முன்னணியின் உறுப்பினர்களும் மிகவும் உற்சாகமாக பங்குபற்றியிருந்தனர். இத்தருணத்தில் எம் வேண்டுகோளை ஏற்று எமக்கு இவ் இரத்த தான
வைபவத்திற்கான ஏற்பாடுகளை செய்து தந்திருந்த களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் திரு.கு.சுகுணன் அவர்களுக்கும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர் கிருஸ்ணவேணி அவர்களுக்கும் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை இரத்த வங்கி உத்தியோகத்தர்கள், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் ஊழியர்கள் அனைவருக்கும் எமது முன்னணியின் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவிக்கிறேன் எனக் கூறியிருந்தார்.
0 Comments:
Post a Comment