11 Feb 2016

போரதீவுப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் காலமானார்.

SHARE
போரதீவுப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், எழுத்தாளருமான,  பூ.மா.செல்லத்துரை இன்று  81 வது வயதில் காலமானார்.
மட்டக்களப்பு பெரியோரதீவைச் சோர்ந்த அன்னார் அரசியல், சமூகக், ஆயிவுக் கட்டுரைகளை தேசிய பத்திரிகைகளில் எழுதி வந்தார்.

இவற்றினை விட ஆரம்ப காலத்தில் வெளிவந்த சுதந்திரன், மற்றும், தாயகம், ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றிய அனார், இறுதி மூச்சுவரை தமிழ் மக்களுக்காகவும், சமயப் பணிகளிலும், பல சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு போரதீவுப்பற்று பிரதேச முதியோர் சங்கத்திள் தலைவராக இறுதிவரைச் செயற்பட்டு வந்துள்ளார வந்துள்ளார்.

காலம் சென்ற பூ.மா.செல்லத்துரையின் இறுதிக் கிரிகைகள் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் பெரியபோதீவிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: