மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி செவ்வாய்கிழமை (09) பிற்பகல் 2.30 மணியவில் அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் ஆத்மீக அதிதியாக இராமகிருஸ்னமிஷன் சுவாமி சிறிமத் சுவாமி பிரபு பிறேமானந்தாஜீ மகராஜ் அவர்களும் மற்றும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் அவர்களும் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் மண்முனைக் கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சுகுமாரன் உடற்கல்வி உதவிக்கல்விக் கல்விபணிப்பாளர் வீ.லவக்குமார் மட்டக்களப்பு மக்கள் வங்கி முகாமையாளர் எஸ்.சரவணபாவான்இ காத்தான்குடி பொலீஸ்நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.வீ.வெலகெதர உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் பெற்றோர்கள்இமாணவர்கள் கலந்து கொண்டனர்.
அவபாமியா நிவேதிதா சாரதா ஆகிய இல்லங்களுக்கிடையில் போட்டிகள் நடைபெற்றது. இதன் போது அணிநடை கண்காட்சி உடற்பயிற்சி கண்காட்சி சுவட்டு நிகழ்ச்சிகள்இவினோதஉடைப்போட்டிகள் ஆசிரியர்களுக்கான பழையமாணவிகளுக்கான போட்டிகள் எனப்பல நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன்போது 359 புள்ளிகளைப் பெற்று அவபாமியா இல்லம் முதலாம் இடத்தினையும் 331புள்ளிகளைப்பெற்று சாரதா இல்லம் இரண்டாம் இடத்தினையும் 327 புள்ளிகளைப்பெற்று நிவேதிதா மூன்றாம் இடத்தினையும் தட்டிக்கொண்டது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கான சான்றிதழ்களையும் வெற்றிக்கேடயங்களையும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment