கிழக்கு மாகாணத்தின் முதலாவது சதொச விற்பனை நிலையம் இன்று ஞாயிற்றுக் கிழமை (28) மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இந்நிலையில் இன்றயதினம், பட்டிருப்பு கிராமத்தில் 2 மில்லியன் ரூபாய் செலவில் நிருமானிக்கப் பட்ட புதிய பாலர் பாடசாலைக் கட்டமும் திறந்து வைக்கப்பட்டதோடு, களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் வைத்து பொற்றொழிலாளர்கள் 200 பேருக்கு பட்டைதீட்டும் இயந்திரங்களும், கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சினால் வழங்கப்பட்டன.28 Feb 2016
SHARE
Author: eluvannews verified_user
0 Comments:
Post a Comment