கால்கடுக்கக் கடுக்க காத்திருந்து வரிசையாகச் சென்று மலர்மாலை சூட்டிய நிகழ்வொன்று இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது…..
மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது சதொச நிலையம் இன்று களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இத்திறப்பு விழாவிற்கு வருவதற்காக இன்றயத்தினம் காலை 8.30 வரவிருந்த அமைச்சர்கள் முற்பகல் 11 மணியளவில்தான் வருகைதந்திருந்தர்கள்.
பட்டிருப்புத் தொகுதியின் நாலாபக்கமுமிருந்துவந்த மக்கள் வீதிஓரங்களிலும், சந்திகளிலும், கூட்டம் கூட்டமாக நின்றதுடன், மக்கள் வெள்ளம் இராசமாணிக்கம் மண்டபம் பூராகவும் நிரம்கி வழிந்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
இந்நிலையில் அமைச்சர்களுக்கு அணிவிக்க மக்கள் கையில் மிக நீண்ட மலர்ஃ மாலையுடன் கால் கடுக்கக் கடுக்க காத்திருந்தனர். பின்னர். நிகழ்வுக்கு அமைச்சர்கள் உள்ளிட்ட பிரமுகள்கள் வந்திறங்கியதும் மக்கள் வெள்ளம் அலையெனத்திரண்டு அமைச்சர்களை கால் அடிஎடுத்து வைக்கமுடியாத அளவிற்கு சாரை சாரையாகச் சென்று மலர் மாலை அணிவித்ததனையும், அவதானிக்க முடிந்தது.
0 Comments:
Post a Comment