-எம்.எஸ்.எம். சறூக் -
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிராந்திய முகாமையாளராக (நடாத்துதல் மற்றும் பராமரிப்பு) பொறியியலாளர் டி.ஏ. பிரகாஷ் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொதுமுகாமையாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உதவி பொதுமுகாமையாளர் அம்பாரை அலுவலகத்தில் 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டுவரை பிரதான பொறியியலாளராவும்(நிர்மாணம்) ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவி மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இரண்டாந்தர நகரங்களுக்கானதும் கிராமங்களுக்கானதுமான நீர் விநியோக சுகாதாரதிட்டத்தின் பிரதான நீர் விநியோக குழாய் பதித்தல் மற்றும் நீர் தாங்கிநிர்மாணப் பிரிவுக்கான நிர்மாணத்துறை முகாமையாளராகவும் 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டுவரை கடமையாற்றியதுடன் தேசியநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மாவட்ட பொறியியலாளராகவும் (2001-2008) கடமையாற்றியுள்ளார்.
அத்துடன் இலங்கை பொறியியலாளர்கள் நிறுவனத்தின் (IESL)2015/2016 ஆம் ஆண்டிற்கான கிழக்கு பிராந்தியத்திற்கான தவிசாளராகவும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தியகல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவராகவும் தற்போது பதவிஏற்றுள்ள பிராந்தியமுகாமையாளர் டி.ஏ. பிரகாஷ் செயற்பட்டு வருகின்றார்.
0 Comments:
Post a Comment