29 Feb 2016

தமிழ் மொழியை நிர்வாக மொழியாக உபயோகிக்க புதிய அரசியல் சாசனம் வழிவகுக்க வேண்டும்-சர்வதேச சட்டத்தரணி க.சிதம்பரநாதன்

SHARE
இலங்கையைச் சேர்ந்தவரும், தற்போது கனடா நாட்டில் வசித்து வருபவருமான சர்வதேச சட்டத்தரணி கண்ணமுத்து சிதம்பரநாதன் இலங்கையில் ஏற்படுத்தப்பட விருக்கின்ற புதிய அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடையங்களை புதிய அரசியல் சாசனம், உருவாக்கும் குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளனார். அதில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது…


நான் ஒரு இலங்கைப் பிரஜை என்ற வகையில், எனது வாழ் காலப் பகுதியில் எனது தாய் நாட்டிற்கு, உரிய ஒரு புதிய அரசியல் சாசனம், வரையும், செயற்பாட்டுக்கு, எனது கருத்தையும், சொல்வதற்கு, வாய்ப்புக் கிடைத்தது அரிதான சந்தர்ப்பமாகும். எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை பயனுள்ளதாக்கி  எனது கருத்துக்களை முன்வைக்கின்றேன்.

இது புதிய அரசியல் சாசனத்திற்குரிய ஒரு வரைவு அல்ல புதிய வரைவை உருவாக்குவோருக்கான முக்கிய விடையங்களில், சுருக்கமான எனது யோசனைகள் மூலம், ஒருபுரிதலை எற்படுத்தும்.




1.தேசியம்- இனம்- மொழி- கலாச்சாரம்

இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் இலங்கையில் வாழும் சகல இனத்தவர்களும் ஒரு ‘தேசிய இனம்’ என்ற உணர்வுடன் வாழ்வதற்குரிய அடிப்படை உரிமை மறுக்கப்பட்டது அல்லது தரப்டவில்லை என்பதன் அடிப்படையில் புதிய அரசியல் சாசனம் இலங்கையில் வாழும் சகல இனத்தவர்களும் ‘இலங்கையர்’ என்ற தேசிய உணர்வை பெற்றிட வழிவகுக்க வேண்டும்.

பிரதான இரண்டு மொழிகளால் வேறுபட்டு இருக்கும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் தங்களது இனங்களால் வேறுபட்டவர்கள். அவர்களின் மதம், கலாசார விழும்மியங்கள் சமமான தரத்தில் அரசியல் சாசனத்தில் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். இலங்கை நாட்டில் எல்லா பிரதேசங்களிலும் வாழ்ந்து வரும் சகல இனத்தவர்களும் அந்த நாட்டில் சகல உரிமைகளுடனும் சமமான பிரஜைகளாக வாழ புதிய சாசனம் வழிவகுக்க வேண்டும். எந்தவொரு இனமும், நாட்டினுள் இலங்கையர் அல்லாத ஒரு இன அடிப்படையிலான தேசிய இனமாக தங்களை அடையாளப் படுத்துவதை புதிய அரசியல் சாசனம் இல்லாது ஒழிக்க வேண்டும். இலங்கையில் சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில் அவர்களை பெரும்பான்மை இனத்தவர்களின் உரிமைகளில் இருந்து எந்த வகையிலும் மாறுபட்ட உரிமைகளை கொண்டவர்கள் என்ற கொள்கை இலங்கைத்தீவில் புதிய அரசியல் சாசனத்தில் எந்த அடிப்படையிலும் சேர்த்து கொள்வதற்கு எதிரான மனநிலையை சகலரும் கொண்டிருக்க வேண்டும்.

இலங்கையில் ஒரு குறிப்பிட்ட பிரதசத்தில் ஒரு இன மக்கள் செறிவாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதற்காக அந்த பிரதேசம் தங்களது பூர்வீகமானது எனபற்காகவோ அல்லது அந்த பிரதேசத்தில் வாழும் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் ஒரு மொழியை, அல்லது மதத்தை அல்லது ஒரு கலசாரத்தை கொண்டவர்கள் என்பற்காக அர்களது பிரதேசத்தை ஏனையவற்றிலிருந்து மாறுபாடாக பார்க்கும் அல்லது மாறுபாடாக பார்க்கப்பட வேண்டுமென்ற கொள்கை  புதிய அரசியல் சாசனத்தில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது. மாறாக பெரும்பான்மை அல்லது சிறுபான்மை என்ற பாகுபாடு ஒழிக்கப்பட்டு சகல இனத்தவர்களும்  அவர்கள் மொழி, மதம் கலாசாரம் என்பதற்கு அப்பாற்பட்டு ‘ஒரு தேசியம’; என்ற அடிப்படையில் சகல உரிமைகளையும் அனுபவிப்பதற்க்கு புதிய அரசியல் சாசனம் உறுதி செய்ய வேண்டும்.

இதன் அடிப்படையில் பல்வேறு மொழிகளை பேசும் வெவ்வேறு இனங்களை கொண்ட பல உலக நாடுகளில் ஒன்றுக்குமேற்பட்ட மொழிகளை அரச, நிர்வாக மொழிகளாக்கி அந்த நாடுகளில் மொழி அடிப்படையில் ஒரு தேசிய மக்களை வேறுபடுத்தாத நல்லாட்சி செய்துவரும் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் பக்கம் இலங்கை அரசியல் தலைவர்கள் தங்கள் பார்வையை செலுத்த வேண்டும். 

உலக நாடுகளில,; சிங்களம் என்ற மொழியை பேசுகினற இன மக்கள் வாழும் ஒரு நாடாக இலங்கை தீவு இருப்பதினால் அந்த மொழி அழிந்துவிடாமல் பார்த்துக் கொள்வதிலும் அந்த மொழியைபேசும் மக்களை பாதுகாப்பதிலும் இலங்கை சிங்கள அரசியல் தலைவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வதில் எந்த வித பெரும்பான்மை ஆதிக்கம் என்று வர்ணிக்க முடியாது. அதேவேளை தமிழ் மொழிக்கு  சமமான அரசியல் அந்தஸ்த்து வழங்குவதோ அல்லது அந்த மொழி பேசும் மக்களை சமான உரிமையுடையவர்கள் என்று பார்ப்பதினாலோ, பெரும்பான்மை சிங்கள மக்களும் அரசியல் வாதிகளும் தங்கள் மொழிக்கும் இனத்துக்கும் செய்யும் ‘துரோகமென்றோ’ அல்ல தங்களது மொழியை அல்லது இனத்தை அழிககும் செயற்பாடக நவீன உலக நிரோட்டத்தில் பார்க்க கூடாது. தமிழ் மொழியை பேசுகின்ற மக்களும் அதன் தலைவர்களும் தங்கள் மொழி கலாச்சாரம் என்பன பாதுகக்கப்பட வேண்டுமென விரும்புவது இனவாதகமாகவும் எடுத்துக் கொள்ளப்படக்கூடர்து.

13 வது அரசியல் சாசன திருத்தத்தின் மூலம் வட கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழி நிர்வாக மொழியென்ற சரத்து முற்றாக நீக்கபட்டு நாடு முவதும் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கும் தமிழ் மொழியை நிர்வாக மொழியாக உபயோகிக்க புதிய அரசியல் சாசனம் வழிவகுக்க வேண்டும். இலங்கையில் வாழும் சகல மக்களும் தாங்கள் பேசுகின்ற மொழியில், நாட்டின் எந்தவொரு பகுதியிலும் அரச நிர்வாககத்தை தொடர்பு கொள்ளவும், நீதிமன்றங்களில் தங்களது மொழியில் வழக்காடவும் வழி செய்வதை புதிய அரசியலமைப்பு உறுதி செய்ய வேண்டும்.

2. ஜனநாயகம் -தேர்தல் - மக்கள் பிரதிநிதிகள்

கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக இலங்கை தீவில் அரசியலானது சிங்களம, தமிழ், முஸ்லீம் என்ற இனவாத வட்டத்திற்குள் இருந்து கொண்டே பிரயாணம் செய்யப்பட்டது என்பது கசப்பான உண்மை. சிங்கள  அரசியல் வாதிகனிள் செயற்பாடுகளுக்கு ஈடுகொடுப்பதற்க்காக, தமிழ் முஸ்லீம் அரசியல் வாதிகளும் தங்களை இனவாதிகளாக மாற்றிக் கொண்டார்கள். புதிய அரசியல் சாசனம் என்பது,  வெவ்வேறு இனத்தவர்களை அடிப்படையாக வைத்து  ஜனநாயகம்  என்ற  போர்வையில் அரசியல் நடாத்தும் செயற்பாடு தொடர்வதை உறுதி செய்யுமா? அல்லது அதற்கு ஒரு முற்று புள்ளி வைக்குமா என்பது ஒரு முக்கிய கேள்வி. முற்றிலும் வாக்கு வங்கியை நம்பியே இனவாத அரசியல் நடாத்தும ஒரு கேடான நிலைக்கு புதிய அரசியல் சாசனம் முற்று புள்ளி வைக்க வேண்டும். இன அடிப்படையில் தேர்தல்களில் வாக்கு கேட்கும் எந்த அரசியல் கட்சிகளுக்கும் புதிய அரசியல் சாசனம் இடம் அளிக்க கூடாது.

நாட்டு மக்களுடைய நலன்களை வெவ்வேறு மட்டங்களில் உள்ள நிர்வாக அமப்புக்கனளாக பார்த்துக் கொளள வேண்டு மென்பதற்காகவே நபடாளுமன்றம் முதல் உள்ளுராச்சி சபை முதல் அமைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக முறையில் மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள், அந்த நிர்வாக அமைப்புகளில் பங்கேற்றுக் கொண்டு மக்களின் குறை நிறைகள தெரிந்து கொண்டு, அதற்கேற்ப செயற்பட கடமைப்பட்டவர்கள். தற்போது உள்ள தேர்தல் முறை, அவ்வாறானஒரு நோக்கத்தை கொண்டதாக உள்ளதா என்றால் இல்லை என்றே கூறவேண்டும். இந்த தேர்தல் முறை மாற்றப்பட வேண்டுமென்பதை தற்போதைய நல்லாட்சிகான அரசில் தலைவர்கள் உணர்ந்துள்ளார்கள். எனவே புதிய அரசியல் அமைப்பில், அடிமட்டத்தில் உள்ள வாக்கு அளிக்கும் மக்களுக்கு பொறுப்பு கூறும் கடப்பாட்டில் இருந்து வாக்கு பெறுபவர்கள் தப்பிக்கொள்ளும் சந்தர்ப்பதை புதிய அரசியல் சாசனம் வழங்கப்படாது. ஓரு கொள்கை அடிப்படையிலோ அல்லது கட்சி அடிப்படையிலோ வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்படும் ஒருவர் அந்த வாக்காளர்களின் அனுமதி இன்றி அந்த கொள்கையிலிருந்தோ அல்லது கட்சியிலிருந்தோ விலகி கொள்ளும் உரிiயை இல்லாதொழிக்க அரசியல் சாசனம் உறுதி செய்ய வேண்டும்.

3. மாகாண சபை-அதிகார பரவலாக்கல்

அதிகாரப் பரவலாக்கல், எவ்வாறு நாட்டின் நல்லிணக்கம், ஒருமைப்பாடு, தேசிய அபிவிருத்தி, மேலான  தனி மனித வாழ்க்கை என்பதில் பல்வேறு நாடுகளில் பங்களிக்கின்றன என்பதனை இலங்கை அரசியல் வாதிகள்; கவனத்தில் கொள்ள வேண்டும். அதிகாரப் பாவலாக்கலினால், நாடு  துண்டுகளாக பிரியும் என்ற ‘கோசம்’ இலங்கை  அரசியல் வாதிகளுக்கு, ஒரு குறுகிய சுயநல வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்ளவும், பெரும்பான்மை சிங்கள மக்களின ஆதிக்கத்தை சிறுபான்மை மக்களிட்டத்தில்  செலுத்துவதற்கும்  கையாளப்பட்ட ஒரு அரசியல் ‘குரோத மனப்பான்மை’வெளிப்பாடு என்றே கூறவேண்டும்.  மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதகாக உருவாக்கப்பட்ட 13வது அரசியல் சாசன திருத்தத்தில்,  பெரும்பான்மை சிங்கள அரசியல் தலைவர்களின் இந்த நிலைபாடு வெளிப்படுகினறது.

மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற ஒரு மாகாண சபையும் அதன் முதல்வரும் அந்த மக்களின் நலன்கனை பேணவேண்டிய அவசியமுள்ளது. ஜனாதிபதியினால் நியமிக்கபடுகின்ற ஆளுணர் என்ற ஒரு அதிகாரியை இடையில் வைத்துக் கொண்டு கொண்டு, மாகாண சபையின் செயற்பாடுகளை முடக்கும் தன்மையை காண்கிறோம. இந்த நடைமுறை அதிகார பரவாலாக்கலுக்கு உகந்தது ஆகாது. ஆதிகார பரவலக்கல் இலங்iயில் எவ்வாறு இருக்கவேண்டு மென்பதை அறிய அரசியல்வாதிகள் அதிக தூரம் செல்ல வேண்டியதில்லை. பல்வேறு மொழிகளை பேசும் பல இனங்கள்  வாழும் பெரிய ஜனநாயகநாடு இந்தியா  அண்டையில் இருக்கின்றது. அங்குள் மாநில ஆட்சி தொடர்பான முறைமையை பார்த்து அது போன்ற  ஒரு நிர்வாக முறைமை உருவாக்குவதும அந்த நாட்டு நிர்வாகத்திடம் அதற்குரிய ஒத்தழைப்பை பெறுவதும் உகந்த வியடம்.

ஓன்றுக்கு மேற்பட்ட உள்ளுராட்சி சபைகளும் மாகாண சபைகளும் தங்களுக்குள் இணைவை ஏற்படுத்துp தங்களது வளங்களை பகிர்ந்து கெண்டு மக்களின் மேம்பாட்டுக்காக தங்களுக்குள் இணைவை ஏற்படுத்தி இயங்குவது ஒரு ஆராக்கியமான நடைமுறையாக கருதலாம்.  மக்களே அதனை தீர்மானிக்க வேண்டுமே தவிர அரசியல் வாதிகள் அல்ல, அரசியல் காரணங்களுக்காகவும், ஒரு இனத்தை, மொழியை அல்லது மதத்தை சார்ந்தவாகள் என்ற காரணத்திற்காக மாகாணங்கள் அல்லது உள்ளுர் சபைகள் இணைவது மற்றைய இனங்களிடமிருந்து தங்களை பிரித்துக் கொண்டு, இன ஐக்கியத்திற்கும் ஒருமைபாட்டுக்கும் குந்தகம் ஏற்படுத்தும் செயற்பாடகவே முடியும். 

4. நீதி - அடிப்படை மனித உரிமை

இலங்கை அரசியல் சாசனத்தில்  இலங்கை பிரஜைகளின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவது பற்றி கூறப்பட்டுள்ளது சர்வதேச மனித உரிமைகள் சானத்தின் அடிப்படையில் இவை உள்ளன. ஆனால், கடநத கால நடைமுறையில் இந்த பாதுகாப்பு சிறுபான்மை இனங்களான தமிழ் முஸ்லீம் மக்களுக்கு எப்போதும் வழங்கபட்டவில்லை. நிiவேற்று அதிகாரம், இவ் உரிமைகளை சிறுபான்மையினம் அனுபவிப்பதை கட்டு படுத்தியே வந்துள்ளது. அவசரகால சட்டம், பயங்கரவாத தடை சட்டம் எனபன சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக அதிக சதர்ப்பங்களில் பிரயேகிக்கப்பட்டன. அரச அதிகாரங்களுககு எதிரன அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பான குற்றங்கள் கவனத்தில் எடுக்கப்பட வில்லை. அதன் ஒட்டு மொத்த விளைவுதான்: இலங்கையின் இறையான்மையில் சர்வதேச தலையீடுகள். அடிப்படை உரிமைய பாதுகாக்க வேண்டிய இலங்கையின் அதிஉச்ச அதிகாரமாகிய உச்ச நீதிமன்றமே அரசியல் தலையீட்டில் சின்னாபின்னமாகிய காலகட்டமொன்று இருந்தது. புதிய அரசிய சாசனம் சகல இன மககளின் அடிப்படை உரிமைகளை பாகாக்கும் பல்வறு பொறிமுறையை கொண்டதாகவும் அதன் உச்சபாதுகாவலானபக இருக்கும் உச்ச நீதிமன்றம் இருப்பதையும் புதிய அரசியல் சபசனம் உறுதி செய்ய வேண்டும்..

5. இந்தியா - தேசிய பாதுகாப்பு -  பயங்கரவாதம் -பொறுப்பு கூறல் - நல்லிணக்கம – ஒருமைபாடு

இலங்கையின் அரசியல் வரலாற்றில் பயங்கரவாதமும் அதனுடாக ஏற்பட்ட தேசிய பகாதுகாபபு என்புது  புதிய பரிமானத்தில் இலங்கையை அதன் பல்வேறு வளர்ச்சி பாதையிலும் முக்கிய ஒன்றாக  இருக்கின்றது. 1983க்கு முன்பு இப்படியொரு நிலமை இலங்கைக்கு இருக்க வில்லை. புதிய அரசியல் சாசனமொன்றை உருவாக்க  முயலும் அரசியல் தலைவர்கள், இவ்வாறான நிலமை உருவாக்குதற்கு இலங்கை அரசியல் சாசனமும் ஒரு காரணம் என்பதை ஏற்றுக் கொண்டு  அதற்கான மாற்றீடுகளை தேடவேண்டும். பயங்கரவாத்திற்கான யுத்தம் அதனல் ஏற்பட்ட வடுக்கள் என்பன உண்மையை கண்டறியும்  செயற்பாட்டில் இருந்து ஆரம்பித்து, அதற்கான பொறுப்புகூறல், நல்லிணக்கம் என்பன எதிர்கால சந்ததிக்கு, அதன் தேசிய ஒருமைபாட்டை உறுதி செய்ய இன்றைய அரசியல் தலைமைகள் உருவாக்க இருக்கும் புதிய இலங்கையாக அமையும்.

இனங்களுக்கு இடையிவான முரன்பாட்டை தங்கள் அரசியரல் ஆதயமாக்கிக் கொண்ட இலங்கை அரசியல் வாதிகள், இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, பரஸ்பர நம்பிக்கை, ஒருவருக்கொருவர் அணுகு முறையிலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டார்கள். ஒரு இனத்தினற்கான விடுதலையும் அதற்காக  உருவெடுத்த போரட்டங்கள அந்த போராட்டங்களுக்கு எதிரான அரச அதிகாரங்களின் செயற்பாடுகள் கடந்த காலத்தில் இனங்களுக்கிடையிலான மோதலாகவும் மனித நேயத்திற்க்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளாக உருமாறியது.  

அண்டை நாடான இந்தியாவின்  தமிழ் நாட்டு மக்களின் இலங்கை தமிழ் மக்களின் மீது கொண்ட கரிசணை பல தடவைகள் இலங்கை தீவில் இந்;தியாவின் நோடி தலையீடுகளுக்கு வழிவகுத்தது. இது சிங்கள மக்களுக்கு வெறுப்பை மாத்திரமின்றி அவர்களது நாடடில் அடக்கப்பட்டு விடுவோமோ என்ற  பீதியையும் உண்டாக்கியது. அதன் விளைவு அண்டை நாடான இந்தியாவை விட்டு சீனா போன்ற வல்லரசுகளை இலங்கை அரசு பாதுகாப்பு தேடவேண்டியதாயிற்று.  

அரேபியா பிராந்தியத்தில் இஸ்ரேல் நாட்டின் இருப்பை அமெரிக்கா எவ்வாறு உறுதிப் படுத்கின்றதோ அதேபோன்ற நிலமை இலங்கைககு சீனா போன்ற நாடுகளிடம் இருந்து தேவைபட்டது. புலம் பெயர் தமிழர்களும் தமிழ் நாட்டு சில அரசியலவாதிகளும் தொடர்ந்து தம்ழர்களுக்கான ‘தனியான நாடு’ உருவாக்கும் கோசங்களும் செயற்டபாடுகளும் இருக்கும்போது, இலங்கை அரசு தனது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல  என்ற அச்சத்தில் இருந்து விடுபடாது. இந்தியாவும் அதன் மக்களும் இலங்கை மக்களின் நன்பர்களாகவும் இருக்க வேண்டியதும், அண்டை நாடு எனபதற்கு மேலாக மொழி மதம் கலாசாரம் பண்பாடு என்ற விழும்மியங்களுடன் ஒன்றுபட்ட ஒற்றுமையை  என்றம் உறுதிபடுத்த வேண்டியதன் அவசியம் இரண்டு நாடுகளுக்கும் தேவையானது.

இலங்கை, இந்தியா இரண்டு நாடுகளினது எதிகாலச்சநத்திகள் அன்னோனியமான புரிந்துணர்வை ஏற்படுத்துவது அவசியம்.  புதிய அரசியல் அமைப்பில் இனங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை களையும் பட்சத்தில்;  மற்றுமொரு பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் இந்தியா மாத்திரமின்றி எந்தவொரு சர்வதேசத்தின்  தலையீடுகளுக்கும் இடம் அற்ற நிலை உருவாகும். என அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.



SHARE

Author: verified_user

0 Comments: