மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவு ஞாயிற்றுக் கிழமை (28) களுவாஞ்சிக்குடி சீ.மூ.இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் பட்டிருப்பு தொகுதியின் தமிழரசுக் கட்சி கிளைத் தலைவர் விஜயரெட்ணம் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச த்திற்கான தமிழரசுக் கட்சியின் புதிய நிருவாகத் தெரிவு இடம் பெற்றது. பிரதேச கிளையினுடைய தலைவராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா தெரிவு செய்யப்பட்டதுடன் உப தலைவராக களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த ந.புருஷோத்மன் தெரிவு செய்யப்பட்டதுடன் செயலாளராக துறைநீலாவணையைச் சேர்ந்த சா.இராஜேந்தரனும் உப செயலாளராக ந.தேவமணியும் பொருளாளராக களுதாவளையைச் சேர்ந்த க குணசேகர மும் தெரிவு செய்யப்பட்டனர்.
தொடர்ந்தும் ஒவ்வொரு கிராமங்களு குமான உறுப்பினர்களாக மகிழூர் - இராஜகுலசிங்கம், ஓந்தாச்சிமடம் - த.சிறிஸ்கந்தராஜா, குருமன்வெளி - மா.கருணைரத்தினம், பட்டருப்பு - கே.கிருஷ்ணகுமார், தேற்றாத்தீவு - கணபதிப்பிள்ளை, குருக்கள்மடம் - எஸ்.சிவநடேசன், த.சண்முகராசா, ரஞ்சினி ஆகியோரும்தெரிவு செய்யப்பட்டனர்
தமிழரசுக்கட்சியின் புதிய பிரதேசக் கிளை ஆரம்பிக்கும் இந் நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் விவசாய கால்நடை மீன்பிடி கூட்டுறவு அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு இணைத் தலைவருமான சிறிநேசன் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்சீ.யோகேஸ்வரன் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பா.அரியநேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்ததோடுமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின்ஆதரவாளர்களும் அங்கத்தவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment