அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான அமர்வுகள் இன்றைய தினத்துடன் நிறைவடைந்தன.
இதில் முன்வைக்கப்பட்ட மட்டக்களப்பு சமூக பொருளாதார கல்வி அரசியல் சுற்றுப்புறச்சூழல் அபிவிருத்தி அமையத்தின் உத்தேச (புதிய) அரசியல் யாப்புக்கான முன்மொழிவுகளில் பல்வேறுபட்ட முக்கிய அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன.
அதன் முழுமையான முன்மொழிவு,
முகவுரை
இலங்கையின் புதிய அரசியலமைப்பு முகவுரை (Pசநயஅடிடந) ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும். இம்முகவுரை பின்வருமாறு வரையப்;பட்டிருக்க வேண்டும்.
இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாடு, இறைமை, ஐக்கியம் என்பவற்றை இலங்கையர்களாகிய நாம் பாதுகாப்பதற்குத் திடசங்கர்ப்பம் பூண்டுள்ளோம். இலங்கை தொன்று தொட்டு பல்லின, பல்மொழி பல் சமய பன்மைத்துவ சமுதாயமாகும். நாம் இலங்கையர் என்ற நாட்டுப்பற்றை ஊட்டும் வகையில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் (சோனகர்கள்), பறங்கியர்கள் வாழுகின்ற பன்மைத்துவ சமுதாயம் நல்லிணக்கத்துடன் ஆளப்படவேண்டும். தமக்கேயுரித்தான கலாசாரம், மொழி, அடையாளம் கொண்ட இப்பெரும் சமுதாயங்கள் மிகவும் கவனத்துடன் இலங்கையில் பாதுகாக்கப்பட வேண்டியவையாகும். இலங்கையின் வடக்கு, கிழக்கு பிராந்தியங்கள் தமிழ்பேசும் மக்களின் வரலாற்றுக்கால, பூர்வீக வதிவிடமாகும். இப்பிராந்தியத்தில் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து ஏனைய பன்மைத்துவ சமுதாயங்கள் நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்றனர். எனவே இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாடு, இறைமை, ஐக்கியம் என்பவற்றிற்கு வலுவூட்டுவதற்கும், பலப்படுத்துவதற்கும், பன்மைத்துவ இன, மொழி, சமய சமுதாயமாகிய தாம் பாதுகாப்பாகவுள்ளோம் என்ற அகவுணர்வினை பெற்றுக்கொள்ளும் வகையில் எல்லா சமுதாயங்களினதும்; சமத்துவம், பாதுகாப்பு, நல்லிணக்கம், எதிர்பார்ப்பு உறுதிப்படுத்தப்படும்.
அடிப்படை உரிமைகள்
1. பன்மைத்துவ சமுதாயம் வாழ்கின்ற “பிராந்தியங்களின் ஒன்றியத்தில்”; பின்வரும் அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கு குடிமக்கள் உரித்துடையவர்களாவர்.
i. சமத்துவ உரிமை
ii. சிந்திக்கும், கருத்துக்கூறும், கருத்தை வெளியிடும், கருத்தை அறியும் உரிமைகள்
iii. நிறைவேற்றப்படுவதற்காக பிரேரணை ஒன்றைத் தொடக்கி வைக்கும் அல்லது முன்மொழியும் உரிமை
iஎ. விரும்பிய இடத்தில் வாழும்,நடமாடும் உரிமை
எ. விரும்பும் சமயத்தைப் பின்பற்றவும் , விரும்பும் மொழியைப் பேசவுமுள்ள உரிமை
எi. சுரண்டலுக்கு எதிராகச் செயற்படும் உரிமை
எii. அமைதியுடன் ஒன்றுகூடும் உரிமை
எiii. சங்கங்களை உருவாக்கி செயற்படும் உரிமை
iஒ. கல்வி, கலை, கலாசார உரிமை
ஒ. அரசியல் யாப்பு ரீதியான பாதுகாப்பை பெற்றுக்கொள்ளும் உரிமை
மனித உரிமைகள்
3. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளவாறு இலங்கையிலுள்ள பன்மைத்துவ சமுதாயங்களின் மனித உரிமைகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுப் பாதுகாக்கப்படவேண்டும்.
i. எல்லா மக்களும் பிறக்கும் போது சுதந்திரமாகவும், சமத்துவமாகவும், கௌரவத்துடனும், உரிமைகளுடனும் பிறக்கின்றார்கள் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
ii. இனம், நிறம், பால்நிலை, மொழி, சமயம், அரசியல் கருத்து, பிறப்பு, சொத்து, ஏனைய சமூக நிலை சார்ந்து குடிமக்கள் பாரபட்சமின்றி நடாத்தப்பட வேண்டும்.
iii. எல்லா மக்களுக்கும் உயிர்வாழும் உரிமையும், சுதந்திரமும், தனிப்பட்ட பாதுகாப்பைப் பேணும் உரிமையுமுள்ளது.
iஎ. எந்தவொரு தனி மனிதனும் அடிமையாக்கப்படுதல் அல்லது அடிமையாக விற்கப்படுதல் ; தடைசெய்யப்படல் வேண்டும்.
எ. எல்லா மக்களும் சித்திரவதைக்குள்ளாகாமல், துன்பத்திற்குள்ளாகாமல், கீழ்த்தரமாக அல்லது தரக்குறைவாக நடாத்தப்படாமல், விசாரணையின்றி தண்டிக்கப்படாமல் வாழும் உரிமை வழங்கப்பட வேண்டும்
எi. எந்தவொரு இடத்திலும் எந்தவொரு தனிநபரும் சட்டத்தின் முன் சமம்; என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்
எii. சட்டத்தின் முன் அனைவரும் சமம்;. எவ்வித பாரபட்சமுமின்றி சட்டப் பாதுகாப்பினைப் பெறுவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
எiii. சட்டத்தினால் அல்லது அரசியல் யாப்பினால் வழங்கப்படுகின்ற அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றபோது அதற்கு எதிராக நீதிமன்றங்களின் மூலம் பரிகாரம் தேடும் உரிமை வழங்கப்பட வேண்டும்
iஒ. தன்னிச்சையான கைது, பலாத்காரமாக நாடுகடத்தப்படுவதிலிருந்து குடிமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்
ஒ. எந்தவொரு தனி மனிதனுக்கும் தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நீதிமன்றங்களை நாடி நியாயமான பொதுவிசாரணைக்குட்படும் உரிமை, மற்றும் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை நிரபராதியென ஏற்றக் கொள்ளப்படும் உரிமை வழங்கப்பட வேண்டும்
ஒi. திருமணம், தனிப்பட்ட குடும்பம், வீடு தொடர்பாகத் தீர்மானிக்கவும், சுயதீர்மானம் எடுக்கவும், விரும்பிய தொழிலைத் தெரிவு செய்யவும், சொத்துக்ககளைத் தேடிக் கொள்ளவும், தொழிற்சங்கச் செயற்பாடுகளில் பங்குபற்றவும்;, ஓய்வெடுக்கவும், சாவகாசமாக இருக்கவும், சமூக பாதுகாப்பினைப் பெற்றுக் கொள்ளவும், நியாயமான வாழ்க்கைத்தரத்தினை பேணிக் கொள்ளவும், விரும்பிய சமயத்தைப் பின்பற்றவும், சமூக, கலாசார வாழ்வில் பங்கு பற்றவும், கல்வி கற்கவும், நாடு முழுவதும் நடமாடவும் உள்ள உரிமைகள் பாதுகாக்கப்;பட வேண்டும்.
ஒii. துன்புறுத்தலிலிருந்து தப்பிச் சென்று பிறநாடுகளில் தஞ்சம் கோரவும், விரும்பியபோது தாய்நாட்டில் குடியேறவும், குடியுரிமையினைப் பெற்றுக்கொள்ளவும், குடியுரிமையினை மாற்றிக் கொள்ளவும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
மொழி
4. சிங்களம் தமிழ் ஆகிய இரு மொழிகள் பேசுகின்ற சமுதாயத்தில் இடையூடாட்டத்தின் மூலம் சமூக நல்லிணக்கத்தினையும், நல்லாட்சியையும் ஏற்படுத்துவதில் தற்போது நடைமுறையிலுள்ள மொழிக் கொள்கை தோல்விகண்டுள்ளது. எனவே பிராந்தியங்களின் ஒன்றியத்தின் (மத்திய அரசாங்கம்) சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளும் அரசகரும மொழிகளாக்கப்பட்டு இணைப்பு மொழியாக “ஆங்கிலம்” பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.
5. பிராந்தியங்களின்; நிர்வாக மொழிகளாக சிங்களமும், தமிழும் இருத்தல் வேண்டும்.
6. பாராளுமன்றத்தின், பிராந்தியங்களின் சட்டங்கள் ஆங்கிலமொழியில் உருவாக்கப்பட்டு அவைகள் சிங்களத்திலும், தமிழிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
7. பிராந்தியங்களின் ஒன்றிய (மத்திய அரசாங்கம்) நீதிமன்றங்களின் நிர்வாக மொழியாக ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளும் பயன்படுத்தப்பட வேண்டும்.
8. பிராந்திய சபைகளின் ஆள்புல எல்லைக்குட்பட்ட நீதிமன்றங்களின் நிர்வாக மொழியாகச் சிங்களமும், தமிழும் பயன்படுத்தப்பட வேண்டும்.
9. பாடசாலைகளில் ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 13 வரையிலான வகுப்புக்களின் போதனா மொழியாக சிங்களமும், தமிழும் இருத்தல் வேண்டும்.
10. பல்கலைக்கழகங்களின் போதனா மொழியாக ஆங்கிலம் இருத்தல் வேண்டும்
11. பிராந்தியங்களின் ஒன்றியமானது மும்மொழிக் கொள்கையின் பயன்பாட்டுக்குத் தேவையான வசதிகள் அனைத்தையும் ஏற்பாடு செய்தல் வேண்டும்.
குடியுரிமை
12. இலங்கையில் வம்சாவழி மூலம் வாழும் அனைத்து குடிமக்களும் இலங்கை குடியுரிமைக்கு உரித்துடையவர்களாகும்
13. 1948 ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த போது இலங்கையில் வாழ்ந்து வந்த மலையக மக்கள் அனைவரும் இலங்கைக் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
அரசின் தன்மை
14. இலங்கைக் குடியரசானது மத்திய அரசாங்கம் மற்றும் பிராந்திய அரசாங்கங்களைக் கொண்டமைந்து“பிராந்தியங்களின் ஒன்றியம்” என அழைக்கப்பட வேண்டும்.
15. இலங்கையின் பல்லின, சமய, கலாசார பண்புகளைக் கருத்திலெடுத்து நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, வெளிப்படைத்தன்மை, நாட்டுப்பற்று ஆகியள உள்ள சமுதாயத்தை உருவாக்கும் வகையில் சமயச்சார்பற்ற குடியரசாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.
அரசின் வடிவம்
16. வலுவேறாக்கத் தத்துவம் மற்றும் சமனிலைத் தலையீடுகள் கொண்ட அரசாங்க நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
17. இலங்கை குடியரசு கலப்பு அல்லது இரட்டை நிறைவேற்றுத்துறை முறைமையினைக் கொண்டதாக இருக்கவேண்டும்.
18. ஈரங்க சட்டசபையினைக் கொண்டதாக இருக்கவேண்டும்.
பாராளுமன்றம்
19. பாராளுமன்றம் பொது மக்கள் சபை, பிராந்தியங்களின் சபை என இரண்டு சபைகளைக் கொண்டிருக்க வேண்டும்
20. பொது மக்கள் சபை தேர்தல்மூலம் தெரிசெய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட கீழ் சபை என அழைக்கப்பட வேண்டும்.
21. பிராந்தியங்களின் சபை அங்கத்தவர்கள் ஒவ்வொரு பிராந்திய சபையிலிருந்தும் மறைமுகத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும்.
22. பிராந்தியங்களின் சபை மேல்சபை என அழைக்கப்பட வேண்டும்.
23. மேல்சபை அங்கத்துவத்தில் பிராந்தியங்களுக்கு சமபிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
24. பிராந்தியங்களின் சபை நிரந்தர சபையாக செயற்பட வேண்டும்.
25. இதன் அங்கத்தவர்களில் குறிப்பிட்ட தொகையினர் சுழற்சிமுறையில் தெரிவு செய்யப்பட வேண்டும்.
26. மக்கள் இறைமையின் சின்னமாக பாராளுமன்றம் செயற்பட வேண்டும்.
நிறைவேற்றுத்துறை
27. தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்படும், ஐந்து வருடகாலத்திற்கு (5) பதவி வகிக்கத்தக்க வகையில் ஜனாதிபதி ஒருவர் நிறைவேற்றுத் துறைக்குப் பொறுப்பாக இருத்தல் வேண்டும்
28. பாராளுமன்றத்தின் கீழ்சபையிலிருந்து தெரிவு செய்யப்படும் அமைச்சரவையொன்று நிறைவேற்றுத்துறையுடன் இணைந்து செயற்பட வேண்டும்.
29. அமைச்சரவைக்கு ஜனாதிபதி தலைமை தாங்க வேண்டும்.
30. ஜனாதிபதியின் அதிகாரங்கள் தற்போது நடைமுறையிலுள்ள பத்தொன்பதாம் (19) யாப்புத் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அமைதல் வேண்டும்.
உபஜனாதிபதிகள்
31. தமிழ், முஸ்லிம் சிறுபான்மைச் சமூகத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இரண்டு உபஜனாதிபதி பதவிகள் உருவாக்கப்பட வேண்டும்.
32. பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிக்காத, சமுதாயத்தில் உயர் கல்வி, ஒழுக்கம், நேர்மை, உயர்ந்த விழுமியங்களைப் பேணி வாழ்ந்து வரும் தமிழ், முஸ்லிம் சமுதாயத்திலிருந்து இருவரை பாராளுமன்றத்தின் இருசபைகளும் ஒன்றாகக் கூடி மறைமுகத் தேர்தல் ஒன்றின் மூலம் உபஜனாதிபதிகளாக தெரிவுசெய்ய வேண்டும்.
33. உபஜனாதிபதிகளின் பதவிக்காலம் ஆறு (6) வருடங்களாகும்
34. ஜனாதிபதி பதவி ஏதாவதொரு காரணத்தினால் வறிதாகிப் போனால் (இல்லாது போனால்) புதிய ஜனாதிபதி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் காலம் வரை உபஜனாதிபதிகளில் ஒருவர் எந்த சமுதாயம் எண்ணிக்கையில் அதிகமாகவுள்ளதோ அதனடிப்படையில் சுழற்சிமுறையில் ஜனாதிபதியாக பதவி வகிக்க வேண்டும்.
35. இவ்வாறான சந்தர்ப்பத்தில் குடியரசு ஜனாதிபதி ஒருவர் அனுபவிக்கும் அனைத்து அதிகாரங்களையும் உபஜனாதிபதி கொண்டிருப்பார்.
36. ஜனாதிபதிக்காக பதில் கடமையாற்றும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் சுழற்சிமுறையில் உபஜனாதிபதிகளில் ஒருவரை எந்த சமுதாயம் எண்ணிக்கையில் அதிகமாகவுள்ளதோ அதனடிப்படையில் பாராளுமன்றத்தால் நியமனம் செய்யப்பட வேண்டும்.
37. இரண்டு உபஜனாதிபதிகளும் ஆணைக்குழுக்களை நியமனம் செய்வதற்காக உருவாக்கப்படும் அரசியமைப்பு பேரவையின் அங்கத்தவர்களாக்கப்பட வேண்டும்.
38. அரசியலமைப்பு பேரவையின் தலைவராக சுழற்சி முறையில் இரண்டு உபஜனாதிபதிகளும் வருடம் ஒருவர் என்ற வகையில் இரண்டு வருடங்கள் பதவி வகிக்க வேண்டும்.
நீதித்துறை
39. மக்களின் உரிமைகள் சுதந்திரங்களைப் பாதுகாத்து நிலைப்படுத்துவதற்காக உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், பிராந்திய மேல் நீதிமன்றம்; ஆகிய நீதிமன்றங்ளை அரசியலமைப்பு மூலம் உருவாக்க வேண்டும்.
40. மக்களின் அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள், பிராந்திய சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் அனைத்தையும் பாதுகாக்கின்றதும், சட்ட ஆட்சியை நிலைநிறுத்துவதுமான சுதந்திர நிறுவனமாக உயர்நீதிமன்றம்மாற்றியமைக்கப்பட வேண்டும்.
41. நீதித்துறையின் சுதந்திரத்தையும், அரசியல் தலையீடற்ற செயற்பாட்டையும் உச்சளவில் உறுதிப்படுத்துவதற்காக“சுதந்திர நீதிச்சேவை ஆணைக்குழு” நிறுவப்பட வேண்டும்.
42. உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், பிராந்திய மேல் நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் சுதந்திர நீதிச் சேவை ஆணைக்குழுவின் சிபார்சின் பேரில் ஜனாதிபதியால் வழங்கப்பட வேண்டும்.
43. நீதிபதிகளின் தகைமை, பதவியுயர்வு, நீக்கம், துர்நடத்தை மற்றும் தகமையின்மை தொடர்பான விசாரணைக்கான ஒழுங்குமுறைகள் அனைத்தும் சுதந்திர நீதிச் சேவை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு அதன் சிபார்சுகளுக்கு ஏற்ப பாராளுமன்றத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
44. சட்டமா அதிபர் திணைக்களம் மீது செலுத்தப்படும் அரசியல் தலையீட்டினை இல்லாதொழிப்பதற்காக இத்திணைக்களம் சுதந்திர நீதிச் சேவை ஆணைக்குழுவின் நேரடி மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்படவேண்டும்.
பிராந்திய மேல்நீதி மன்றம்
45. பிராந்திய மேல்நீதிமன்ற நீதிபதிகள் சுதந்திர நீதிச் சேவை ஆணைக்குழுவின் சிபாரிசுக்கிணங்க ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட வேண்டும்.
46. பிராந்திய மேல் நீதிமன்றம் பிராந்தியத்தின் ஆள்புல எல்லைக்குள் புரியப்படும் அரசியலமைப்பு தவிர்ந்த அனைத்து குற்றங்களையும், உரிமை மீறல்களையும் விசாரணை செய்து நீதி வழங்கும்.
47. இந்நீதிமன்றத்தின் சுதந்திரமானதும், தடையற்றதுமான செயற்பாட்டிற்காக பிராந்திய சட்டமாதிபர் திணைக்களம் ஒவ்வொரு பிராந்தியங்களிலும் உருவாக்கப்பட வேண்டும்.
பிராந்தியசபைகள்
48. வட, கிழக்கு மாகாணங்கள் “வடகிழக்குப் பிராந்தியம்” எனப் பெயரிடப்படுதல் வேண்டும்.
49. பிராந்தியங்களின் எல்லைகள் மீள்வரையப்படுமாயின், இனவிகிதாசாரத்தைக் கருத்திலெடுத்து இனங்களின் பெரும்பான்;மையினைச் சிதைக்காதவகையில் பிராந்தியங்களின் எல்லைகள் மீள்வரையப்;பட வேண்டும்.
50. ஏனைய பிராந்தியங்கள் நடைமுறையிலுள்ள மாகாண எல்லைகளையும், பெரும் சமுதாயங்களின் விகிதாசாரத்தையும் கருத்திலெடுத்துப் பெயரிடப்படலாம்.
51. பிராந்தியசபை ஒவ்வொன்றும் பிராந்திய சபைத் தேர்தல் சட்டத்திற்கு ஏற்ப உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவதன் மூலம் உருவாக்கப்படுதல் வேண்டும்.
52. பிராந்தியசபைகளின்; அவைத்தலைவர் “சபாநாயகர்” என பெயர் குறித்து அழைக்கப்படவேண்டும்.
53. பிராந்தியங்களின் ஒன்றியத்திற்கான அதிகாரப்பட்டியல், பிராந்திய சபைகளுக்கான அதிகாரப்பட்டியல் எனஇருவகை அதிகாரப்பட்டியல்கள் மாத்திரமே உருவாக்கப்பட வேண்டும்.
54. ஒருங்கிணைந்த அதிகாரப்பட்டியல் முறை இல்லாதொழிக்கப்பட வேண்டும்.
55. பிராந்திய சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரப்பட்டியலுக்குட்பட்டு சட்டங்களை ஆக்கும் அதிகாரம் பிராந்திய சபைகளுக்குரியதாகும். அதனை மீளப்பெற்றுக் கொள்ளும் அதிகாரம் பிராந்தியங்களின் ஒன்றியத்திற்கு வழங்கப்படக் கூடாது.
56. பிராந்தியசபை உறுப்பினர்கள் தொகையில் 25மூ இட ஒதுக்கீட்டினைப் பெண்களுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சியும் வழங்க வேண்டும்.
57. பிராந்தியசபைகளுக்கான தனியான ஊடகப்பிரிவினை உருவாக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.
ஆளுனர்
58. ஒவ்வொரு பிராந்திய சபைக்கும் ஆளுனர் ஒருவர் இருத்தல் வேண்டும்
59. குறித்த ஆளுனர் குறித்த பிராந்தியத்தின் வாக்காளராகவும், அமைச்சு செயலாளர் தரத்தில் பதவி வகித்தவராக அல்லது இலங்கை நிர்வாக சேவை தரம் -ஐ பதவி வகித்தவராக இருத்தல் வேண்டும்.
60. வடகிழக்கு பிராந்தியம் தவிர்ந்த பிராந்தியங்களின் ஆளுனர் பிரதம மந்திரி மற்றும் முதலமைச்சரின் கருத்தொருமைப்பாட்டுடன் ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட வேண்டும்.
61. வடகிழக்கு பிராந்திய ஆளுனர் இரண்டு உபஜனாதிபதிகள் மற்றும் முதலமைச்சரின் கருத்தொருமைப்பாட்டுடன் ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட வேண்டும்.
62. பிராந்தியங்களின் நிறைவேற்றுத்துறை உத்தியோகத்தர் என்றவகையில் இயற்றப்படும் சட்டங்களுக்கு இறுதிக் கையொப்பம் இடும் அதிகாரம் ஆளுனருக்குரியதாகும்.
63. இதற்காக முதலமைச்சர், பிரதிமுதலமைச்சர்கள், அமைச்சர்களின் ஆலோசனைகளை ஆளுனர் பெற்றுக்கொள்ள வேண்டும்.
64. ஆளுனர் நியமனத்தில் கருத்தொருமைப்பாடு எட்டப்படாதவிடத்து இவ்விடயத்தை அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதி சமர்பிக்க வேண்டும். அரசிலமைப்பு பேரவையின் சிபார்சுக்கு இணங்க ஜனாதிபதியால் ஆளுனர் நியமனம் செய்யப்படுவார்.
முதலமைச்சர்
65. மூன்று பெரும் சமுதாயங்கள் வாழுகின்ற பிராந்தியங்கள் அடையாம் காணப்பட்டு பெயர் குறித்து அரசியல் யாப்பில் கூறப்பட வேண்டும். (உதாரணமாக வடகிழக்கு, மத்தி, ஊவா, மேல் மாகாணங்கள்)
66. பிராந்தியசபையின் உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவினை எக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெறுகின்றார்களோ அக்கட்சியின் உறுப்பினர்களில் ஒருவரை குறித்த கட்சியின் கருத்தொருமைப்பாட்டுடன் ஆளுனரினால் முதலமைச்சர் தெரிவு செய்யப்படுவார்.
67. பிராந்திய சபைகளை நிர்வகிக்க மத்திய அமைச்சர் ஒருவர் நியமனம் செய்யப்படலாகாது.
68. பதிலாக பிராந்திய சபைகளின் முதலமைச்சர்கள் அமைச்சரவையின் அங்கத்தவர்களாக்கப்பட வேண்டும்.
69. முதலமைச்சரின் கடமைகளாக:- பிராந்தியங்களிற்கான திட்டங்களை வகுத்தல், பிராந்தியத்தின் நிதியினை முகாமை செய்தல், பிராந்தியத்தின் சட்டம் ஒழுங்கினை நிர்வகித்தல், முதலீடுகளை நிர்வகித்தல் என்பன வரையறுக்கப்படுதல் வேண்டும்.
பிரதி முதலமைச்சர்கள்
70. முதலமைச்சர் மூன்று பெரும் சமுதாயங்களில் ஒன்றைச் சேர்ந்தவராக இருந்தால் இரண்டு பிரதி முதலமைச்சர்களும் ஏனைய இரண்டு பெரும் சமுதாயத்திலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும்.
71. பிரதி முதலமைச்சர்கள் முதலமைச்சர்கள் கூட்டங்களில் பங்குபற்றும் அதிகாரம் கொண்டவர்களாகும்.
72. பிரதிமுதலமைச்சர்களின் அதிகாரங்களாக :- பிராந்திய சுகாதாரம், பிராந்திய சமூக சேவைகள், பிராந்திய கலாசாரம், பிராந்திய தொல்பொருள் மற்றும் நூதனசாலைகள், பிராந்திய போக்குவரத்து, பிராந்திய நகரஅபிவிருத்தி என்பன வழங்கப்படவேண்டும்.
73. முதலமைச்சர் பதவி ஏதாவதொரு காரணத்தினால் வறிதாகிப் போனால் (இல்லாது போனால்) புதிய முதலமைச்சர் நியமனம் செய்யப்படும் வரை பிரதி முதலமைச்சர்களில் ஒருவர் எந்த சமுதாயம் எண்ணிக்கையில் அதிகமாகவுள்ளதோ அதனடிப்படையில் முதலமைச்சராகப் பதவி வகிக்க வேண்டும்.
74. இவ்வாறான சந்தர்ப்பத்தில் முதலமைச்சர் ஒருவர் அனுபவிக்கும் அனைத்து அதிகாரங்களையும் பிரதி முதலமைச்சர் கொண்டிருப்பார்.
75. முதலமைச்சருக்காக பதில் கடமையாற்றும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் சுழற்சிமுறையில் பிரதி முதலமைச்சர்களில் ஒருவரை பிராந்திய சபையின் கருத்தினை அறிந்த பின்னர் ஆளுனர் பதில் முதலமைச்சராக நியமனம் செய்ய வேண்டும்.
பிராந்தியசபை அமைச்சர்கள்
76. பிராந்தியங்களில் முதலமைச்சரையும், இரண்டு பிரதி முதலமைச்சர்களையும் உள்ளடக்கிய அமைச்சரவை உருவாக்கப்பட வேண்டும்.
77. பிராந்தியங்களுக்கு பெயர் குறித்து ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள் தொடர்பில் இயற்றப்படும் சட்டங்களை அமுலாக்கம் செய்வதற்கு பிராந்திய அமைச்சரவை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்
78. அமைச்சரவையின் எண்ணிக்கை அரசியல் யாப்பினால் வறையறுக்கப்பட்டிருத்தல் வேண்டும்
79. அமைச்சரவையின் எண்ணிக்கை தற்போதைய எண்ணிக்கையாகிய ஐந்திலிருந்து (5) பத்தாக (10) அதிகரிக்கப்பட வேண்டும்
80. அமைச்சரவைக்கு முதலமைச்சர் தலைமை தாங்க வேண்டும்.
உள்ளுராட்சிசபைகள்
81. உள்ளுராட்சி சபைகளின் முகாமைத்துவம் அனைத்தும் பிராந்தியசபைகளிடம் கையளிக்கப்பட வேண்டும்.
82. உள்ளுராட்சி சபைகளின் கட்டமைப்பு சுநிழசவ ழக வாந உழஅஅளைளழைn ழக iஙெரசைல ழn டழஉயட பழஎநசnஅநவெ சுநகழசஅ-1999 அறிக்கையில் விதந்துரைக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு மீள்கட்டமைக்கப்படவேண்டும்.
83. பிரதேசசபைகளுக்கு அடுத்த நிலையில் கிராமிய மட்ட நிர்வாகமுறைமை அறிமுகம் செய்யப்பட வேண்டும்.
84. கிராமச்சட்டமூலம் மீண்டும் உருவாக்கப்பட்டு அதனடிப்படையில் ஒவ்வொரு கிராமங்களிலும் வட்டார முறைமை உருவாக்கப்பட வேண்டும்.
85. கிராமங்களுக்குள் வட்டார அலகுகள் (தேர்தல் தொகுதிகள்) உருவாக்கப்பட்டு தேர்தல் மூலம் நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளைக் கொண்ட கிராமசபைகள் உருவாக்கப்பட வேண்டும். இதன்மூலம் கிடைமட்ட ஜனநாயத்தினையும், நல்லாட்சியையும் மக்களுக்கு வழங்கமுடியும்.
86. கிராமிய மட்ட அபிவிருத்தித் திட்டங்களை வரையவும், அமுலாக்கவும் தேவையான அனைத்து அதிகாரங்களும் கிராமசபைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
87. கிராமியசபைகள் மட்டத்தில் சிவில் அமைப்புக்கள் தோற்றிவிக்கப்பட்டு கிராமியசபைகளின் முகாமைத்துவத்தில் மக்கள் பங்கு பற்றுதலுடன் அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
88. மாநகரசபைகள், நகரசபைகள், பிரதேசசபைகள் கட்டளைச்சட்டம் மீள்வரையப்பட்டு அவைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மேலும் வலுவூட்டப்பட வேண்டும்.
89. உள்ளுராட்சி சபைகளுக்கான அமைச்சு ஒவ்வொரு பிராந்தியசபைகளிலும் உருவாக்கப்பட்டு இச்சபைகளை நிர்வகிக்கும் அதிகாரங்கள் பிராந்தியசபை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
90. பிராந்திய சபைகளின் ஆலோசனையுடன் உள்ளுராட்சி சபைகளை கலைக்கும், தேர்தல் திகதியை நிர்ணயம் செய்யும், தேர்தலை நடாத்தும் அதிகாரங்கள் பிராந்திய தேர்தல் ஆணையாளருக்கு வழங்கப்பட வேண்டும்.
91. உள்ளுராட்சிசபை உறுப்பினர்கள் தொகையில் 25மூ இடஒதுக்கீட்டினைப் பெண்களுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சியும் வழங்க வேண்டும்.
92. பெரும்சமுதாயங்கள் வாழ்கின்ற உள்ளுராட்சி சபைகளில் இச்சமுதாயங்களின் விகிதாசாரத்தை கருத்தில் எடுத்து அவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுதல் வேண்டும்.
நிதி
93. தேசிய நிதி ஆணைக்குழு உருவாக்கப்படல் வேண்டும்.
94. தேசிய நிதி ஆணைக்குழுவில் பிராந்தியங்களின் ஒன்றியத்திற்கும், பிராந்தியசபைகளுக்கும் சம அங்கத்துவம் வழங்கப்பட வேண்டும்.
95. பிராந்திய கணக்காய்வாளர் திணைக்களம் ஒன்று பாராளுமன்ற கணக்காய்வாளர் திணைக்களத்தின் கீழ் உருவாக்கப்பட வேண்டும்.
96. பிராந்தியங்களின் ஒன்றியத்தின் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தில் பிராந்திய சபைகளுக்கு வழங்கப்படும் நிதியின் அளவு பிராந்தியத்தின் சனத்தொகை, நில விஸ்தீரணம் என்பவைகளை அளவீடாகக் கொண்டு வகுக்கப்பட வேண்டும்.
97. பிராந்திய சபைகள் தமக்கான நிதிக்கட்டமைப்பை உருவாக்கி நிதி சேகரிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
98. வெளிநாட்டு நேரடி முதலீடுகள், மானியங்கள், அபிவிருத்தி உதவிகள் போன்றவற்றை பெற்று முகாமை செய்கின்ற அதிகாரம் பிராந்திய சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும்
99. பிராந்திய சபைக்குட்பட்ட ஆள்புலநிலப்பரப்பிற்குள் வரி அறவிடுதல், மற்றும் வருமானம் ஈட்டும் அதிகாரங்கள் பிராந்திய சபைக்கு வழங்கப்படுதல் வேண்டும்
100. பிராந்தியங்களின் ஒன்றியம் வகுக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் பிராந்தியசபைகளுடாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
அரசியலமைப்பு பேரவை
101. அரசியலமைப்புப் பேரவையொன்று இருத்தல் வேண்டும்.
102. இவ்வரசியல் அமைப்பு பேரவையில் இரண்டு உபஜனாதிபதிகள், பிரதம மந்திரி, எதிர்கட்சித்தலைவர், சபாநாயகர், அரசியலமைப்பு அமைச்சர், முதலமைச்சரவை கூட்டத் தலைவர், ஒய்வுபெற்ற இரு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் இருத்தல் வேண்டும்.
103. இப்பேரவை ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் அதிகாரத்தைக் கொண்டதாகும்.
பிராந்திய தேர்தல் ஆணைக்குழு
104. பிராந்திய தேர்தல் ஆணைக்குழு ஒவ்வொரு பிராந்தியசபையிலும் உருவாக்கப்பட்டு பிராந்திய சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடாத்தும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.
பிராந்திய பொதுச்சேவை ஆணைக்குழு
105. அரசியலமைப்பு பேரவையினால் பிராந்திய பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
106. பிராந்திய பொதுச்சேவைக்கான ஆட்சேர்ப்பு, இடமாற்றம், பதவியுயர்வு, பதவிநீக்கம், ஒழுக்கக் கட்டுப்பாடு ஆகியவை பிராந்திய பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு பொறுப்பாக்கப்படுதல் வேண்டும்.
107. பிராந்தியசபை அமைச்சு செயலாளர்கள் பிராந்திய பொதுச்சேவை ஆணைக்குழுவின் சிபார்சிற்கு ஏற்ப ஆளுனரினால் நியமனம் செய்யப்படல் வேண்டும்.
தேசிய காணி ஆணைக்குழு
108. தேசிய காணி ஆணைக்குழுவொன்று பாராளுமன்ற சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட வேண்டும்.
109. தேசிய காணி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தொகை பிராந்தியங்களின் ஒன்றியத்திற்கும் (மத்திய அரசாங்கம்), பிராந்திய சபைகளுக்கும் சம அளவில் வழங்கப்பட வேண்டும்.
110. அத்துடன் தேசிய காணி ஆணைக்குழு எல்லா பெருஞ் சமூகத்தினரதும் சம பிரதிநிதித்துவத்தினைக் கொண்டிருத்தல் வேண்டும்.
111. தேசிய காணி ஆணைக்குழுவின் மேற்பார்வையில் பிராந்திய சபைகளுக்குட்பட்ட அரசகாணிகள் அனைத்தும் பிராந்திய சபைகளுக்குரித்தாக்கப்பட வேண்டும்
112. கரையோர பிராந்திய சபைகளைச் சுற்றியுள்ள பத்து கடல் மைல் தூரத்திற்குட்பட்ட கரையோரங்களும், கரையோர வளங்களும், கடலாதிக்கமும் பிராந்திய சபைகளுக்குரியதாகும்.
113. ஆரச காணிகளைப் பகிர்ந்தளிக்கும்போது தேசிய காணி ஆணைக்குழு மாவட்டத்திலுள்ள காணியற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அதன் பின்னர் பிராந்தியத்திலுள்ள ஏனைய மாவட்டங்களின் காணியற்றவர்களுக்கும் முன்னுரிமை வழங்கி காணி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
114. காடுகள் தொடர்பாக சர்வதேச நியமங்களைப் பயன்படுத்தி தேசிய காணி பயன்பாட்டுக் கொள்கையொன்றை தேசிய காணி ஆணைக்குழு உருவாக்க வேண்டும்
115. காடுகள், ஆற்றுப்பள்ளத்தாக்குகள், நீர்தேக்கங்கள், நீரேரிகள், குளங்கள் போன்றவற்றின் பயன்பாடும் மற்றும் பாதுகாப்பு, தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக தேசிய காணி ஆணைக்குழுவின் சிபார்சுகளைப் பின்பற்றி மத்திய அரசாங்கமும், பிராந்திய சபைகளும் செயற்பட வேண்டும்.
116. தேசிய முக்கியத்துவம் கருதி குறித்த பிராந்திய சபையிலுள்ள காணியை விடுவிக்கும்படி மத்தியரசாங்கம் தேசிய காணி ஆணைக்குழுவிடம் கோரமுடியும்.
117. இவ்வாறான சந்தர்பத்தில் பிராந்தியசபையில் சமூகமளித்த உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளுடன் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
118. தேசிய முக்கியத்துவம் கருதி காணிப்பயன்பாடு தொடர்பாக பிராந்தியங்களின் அரசாங்கத்திற்கும், பிராந்திய சபைக்கும் இடையில் கருத்தொருமைப்பாடு ஏற்படாதவிடத்து தேசிய காணி ஆணைக்குழு இது தொடர்பாக தேசிய அரசியமைப்பு பேரவைக்கு அறிக்கையிட வேண்டும்.
119. இரண்டு அரசாங்கங்களுக்குமிடையில் கருத்தொருமைப்பாட்டினை ஏற்படுத்துவதற்காக தேசிய அரசிலமைப்பு பேரவை நியாயத்தீர்ப்பு சபையொன்றினை பாராளுமன்றத்தின் அனுமதியுடன் உருவாக்க வேண்டும்.
120. நியாயத்தீர்ப்பு சபைக்கான உறுப்பினர்கள் பிராந்திய சபைகளினதும், பிராந்தியங்களின் ஒன்றியத்தினதும் சம அளவிலான உறுப்பினர்களைக் கொண்டமைந்திருக்கும்.
121. நியாயத்தீர்ப்பு சபையின் கருத்துக்களினூடாக இரண்டு அரசாங்கங்களும் கருத்தொருமைப்பாட்டிற்கு வரமுடியாமல் போனால், தேசிய காணி ஆணைக்குழு இறுதித் தீர்ப்பிற்காக உயர்நீதிமன்றத்திடம் இவ்விடயத்தை பாரப்படுத்த வேண்டும். உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு இறுதித் தீர்ப்பாகக் கொள்ளப்படும்.
பிராந்திய காவல்துறை ஆணைக்குழு
122. தேசிய அரசியலமைப்பு பேரவையினால் தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்குட்பட்;ட பிராந்திய காவல்துறை ஆணைக்குழு ஒன்றை உருவாக்க வேண்டும்.
123. பிராந்திய காவல்துறை ஆணைக்குழுவின் பொறுப்பில் பிராந்திய காவல்துறை சேவை செயற்பட வேண்டும்;.
124. பிராந்திய காவல்துறை அங்கத்தவர்களின் ஆட்சேர்ப்பு, இடமாற்றம், பதவிநீக்கம், ஒழுங்காற்று நடவடிக்கை என்பவற்றிற்கு பிராந்திய காவல்துறை ஆணைக்குழு பொறுப்பானதாகும்.
125. பிராந்தியங்களுக்கிடையிலான இடமாற்றம் பிராந்திய காவல்துறை ஆணைக்குழுவின் ஆலோசனையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.
126. பிராந்திய காவல்துறைக்குத் தேவையான ஆலோசனைகளை பிராந்திய சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கும்.
பிராந்தியங்கள் தொடர்பான யாப்புத் திருத்தம்
127. பிராந்தியம் அல்லது பிராந்தியங்கள் தொடர்பாக அப்பிராந்தியம்ஃங்களுக்காக உருவாக்கப்பட்ட பிராந்தியசபைஃசபைகளின் தீர்மானம் ஒன்றினால் அங்கீகரிக்கப்படுகின்ற வரையில்;, அல்லது அங்கீகரிக்கப்பட்டாலொழிய பிராந்தியம்ஃங்கள் தொடர்பாக யாப்பில் திருத்தம் செய்யமுடியாது.
128. யாப்பு திருத்தம் ஒன்று பிராந்தியசபைஃகளால் அங்கீகரிக்கப்பட்டால், அப்பிராந்திய சபைஃகளின் சபாநாயகர் இவ்அங்கீகாரம் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிடவேண்டும். அங்கீகாரம் தொடர்புபட்ட திருத்தம் வர்த்தமானி அறிவித்தல் திகதியிலிருந்து பிராந்தியம்ஃகள் தொடர்பில் நடைமுறைக்கு வரும்.
129. பெரும் சமுதாயங்கள் வாழ்கின்ற பிராந்தியங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பிராந்தியசபைகளில் சபாநாயகரைத் தேர்ந்தெடுத்தல் தொடர்பான தீர்மானம், நிலையியற் கட்டளைகளை அங்கீகரிதல் தொடர்பான தீர்மானம், சமயவழிபாடு, அனுஸ்டானம் தொடர்பான செயற்பாட்டில் அல்லது போதனையில் ஏதேனும் சமயத்தின் செல்வாக்கு, சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு, பிராந்தியங்களின் பொருளாதார வாய்ப்புக்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளும் போது பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்:
i. சபையிலுள்ள உறுப்பினர்களுள் 2ஃ3 பெரும்பான்மையோரின் வாக்குகளை இத்தீர்மானம் பெற்றிருக்க வேண்டும்
ii. சபையிலுள்ள இரண்டாவது, மூன்றாவது பெரும் சமுதாயங்களின் உறுப்பினர்களுள் 2ஃ3 பெரும்பான்மையோரின் வாக்குகளை இத்தீர்மானம் பெற்றிருக்க வேண்டும்.
தேசியகீதம்
130. சிங்கள மொழியிலும், தமிழ்மொழியிலும் கலந்து இசைக்கப்படுதல் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினையும், நாட்டுப்பற்றையும் மேலும் வளர்க்க உதவும்.
0 Comments:
Post a Comment