அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான அமர்வுகள் எதிர்வரும் 25, 26ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலுள்ள டேர்பா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.இந்த இரண்டு நாள் அமர்வுகள் காலை 9.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரையில் நடைபெறும். அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பில் மக்களிடமிருந்து வாய்மொழி மற்றும் எழுத்து மூல சமர்ப்பணங்களை பெறுவது அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைக்குழுவின் செயற்பாடாகும்.
உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரத்துடன் இருபது உறுப்பினர்களை கொண்டதாக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களின் கருத்துக்களை அறிந்து இந்த குழு அமைச்சரவைக்கு அறிக்கையொன்றினையும், சிபார்சுகளையும் தயாரித்து அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான அமைச்சரவை உப குழுவிற்கு சமர்பிக்கும்.
பொது மக்கள் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு 0112437676, 0773868563 என்ற தொலைபேசி இலக்கங்களுடனும், 0112328780 என்ற தொலைநகல் இலக்கதிலும் constitutionalreforms@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரியிலும் www.yourconstitution.lk என்ற வலைத்தளம் மூலமும், தபால் மூலமாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.
அதே நேரத்தில், தவிசாளர், அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழு செயலகம், விசும்பாய, ஸ்ரேபிள்ஸ் வீதி, கொழும்பு -02 என்ற முகவரிக்கும் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன், இந்த அமர்வுகளில் பொது மக்கள் பங்கு பற்றலாம்என்பதுடன், பொது மக்கள்தங்கள் யோசனைகளை முன்வைக்கலாம். முக்கியமாக தங்களது யோசனைகளை எழுத்துமூலமாக வழங்குவது விரும்பத்தக்கது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment