3 Mar 2026

கொமர்ஷல் வங்கியினால் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு நவீன கண் பரிசோதனை இயந்திரம் நன்கொடையாக வழங்கி வைப்பு.

SHARE

கொமர்ஷல் வங்கியினால் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு நவீன கண் பரிசோதனை இயந்திரம் நன்கொடையாக வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் சேவைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், கொமர்ஷல் வங்கியினால்சுமார் 25 இலட்சம் பெறுமதியான நவீன கண் பரிசோதனை இயந்திரம் ஒன்று இன்று செவ்வாய்கிழமை(03.03.2026) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

வைத்திய அத்தியட்சகர் கே..புவனேந்திரநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கொமர்ஷல் வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு குறிப்பிட்ட இயந்திரத்தினை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தனர். 

இந்த இந்த நவீன கண் பரிசோனை இயந்திரத்தின் மூலம் வைத்தியசாலைக்கு வருகைதரும் கண் நோயாளர்களுக்கு பரிசோதனைக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம்  அப்பகுதி நோயாளிகளுக்கு தரமான சேவையை வழங்கப்படுவதுடன், உயர்தரமான சேவையையும் வழவுள்ளதாகவும், துல்லியமாகவும் வேகமாகவும் பரிசோதிக்க முடியும் எனவும் களுவாஞ்சிகுடி தோர வைத்தியசாலை நிருவாகம் தெரிவிக்கின்றது.






















  

SHARE

Author: verified_user

0 Comments: