18 Jan 2016

கிழக்கின் சக்தி ஆளுநர் நடமாடும் சேவை

SHARE
(இ.சுதா)
கிழக்கு மாகாண ஆளுநர் செயலகமும் அம்பாறை மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள கிழக்கின் சக்தி ஆளுநர் நடமாடும் சேவை எதிர்வரும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 9.00 மணிமுதல் பிற்பகல் 3.00 மணி வரை அம்பாறை டி.எஸ்.சேனநாயக்க தேசிய பாடசாலையில் நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் கிழக்கு மாகாண சபை மற்றும் மத்திய அரச திணைக்களங்களில் சேவையாற்றுகின்ற உத்தியோகத்தர்களும், பங்குபற்றவுள்ளனர்.

நடைபெறவுள்ள இந்நடமாடும் சேவையின் போது இதுவரை காலமும் மக்கள் மத்தியல், தீர்க்கப்படாத பல பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வினை பெற்றுக் கொடுக்கும் அதேவேளை மக்கள் தமது பிரச்சினைகளை நேரடியாகவோ, எழுத்து மூலமாகவோ, தமது  பிரச்சினையினை முன்வைக்க முடியுமென அம்பாறை மாவட்ட செயலகம் மக்களை கேட்டுள்ளது. 

SHARE

Author: verified_user

0 Comments: