அம்பாறை மத்திய முகாம் சலேன்சர்ஸ் விளையாட்டுக்; கழகம் தமது ஐந்தாவது ஆண்டு நிறைவினை ஒட்டி ஏற்பாடு செய்த மாபெரும் மென்பந்து கிறிக்கெற் சுற்றுப் போட்டியும் சாதனையாளர் பாராட்டு விழாவும், ஞாயிற்றுக் கிழமை மாலை (16) அம்பாறை மத்திய முகாம் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் பி.வசந்த், மத்தியமுகாம் கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி எஸ்.பவானி, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்தப் பரிசோதகர் வ.மதிவண்ணன் , மத்திய முகாம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட மத்திய முகாம் பிரதேசத்தினை பிரதி நிதித்துவப்படுத்தும் ஆலயங்களின் தர்ம கர்த்தாக்கள், விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment