27 Jan 2016

பிள்ளையானிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

SHARE
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதிவரை பிள்ளையானை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.
கடந்த 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கடந்த ஒக்ரோபர் மாதம் இவர்  கைதுசெய்யப்பட்டிருந்தார்.
கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்று 26ஆம் திகதி கிழக்கு மாகாணசபை அமர்வில் நீதிமன்ற உத்திரவின்பேரில் பிள்ளையான் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.  
SHARE

Author: verified_user

0 Comments: