கொழும்பில் கிழக்கு மாகாண முதலமைச்சரின், ஏற்பாட்டில் வியாழக்கிழமை (28) நடைபெறும் கிழக்கின் முதலீட்டு மாhட்டில், பங்கேற்க சர்வதேச முதலீட்டாளர்கள் தொடர்ந்தும் தலைநகருக்கு வந்தவன்னம் உள்ளனர். புதன் கிழமை (27) பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக சவூதி நாட்டின் இளவரசர் எச்.ஆர்.எச்.பிரின்ஸ் அப்துல் அஸீஸ் அல் சவூத் வந்துள்ளார் அவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் வரவேற்றார்.
இவரது வருகை இந்த அரங்கின் வெற்றிக்கு மேலும் உத்வேகளிக்கும் என கிழக்கு முதலீட்டு அரங்கின் கருத்தாவாக விளங்கும் கிழக்கு மாகாண முதலமைச்சரான ஹாபிஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.
கடந்த ஒரு வார காலமாக பங்களாதேஸ், கட்டார், சவூதி, ஓமான், கனடா, இலண்டன், கேரளா, தமிழ் நாடு, மதுரை, சென்னை, பாகிஸ்தான் மற்றும் மாலை தீவு போன்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பல சர்வதேச முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். சர்வதேச முதலீட்டுத் துறையில் ஆர்வம் கொண்டவர்களும் வசதி பணம் படைத்த முதலீட்டாளர்களும் இந்த நிகழ்வில் ஆர்வம் கொண்டு வருகின்றனர்.
சர்வதேச வர்த்தக அமைச்சு, இலங்கை முதலீட்டாளர்கள் சபை ஆகியன கிழக்கு மாகாண சபையின் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி இருக்கின்றன. இந்நிலையில் இம்மானாட்டில் கலந்து கொள்வதற்காகவேண்டி கொழும்புக்கு வெளியே உள்ள உள்ளுர் முதலீட்டாளர்களும் வந்து தங்கியுள்மை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment