கல்முனை ரோட்டரிக் கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இலவச வைத்திய சேவை முகாம் எதிர்வரும் 13 ம் திகதி முதல் 17ம் திகதி வரையுள்ள தினங்களில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, மற்றும், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை ஆகிய இரு இடங்களிலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
வெளிநாட்டு விசேட வைத்திய நிபுணர்களின் வருகை தாமதமடைவதனால், இவ்வையத்திய முகாம் பிற்போடப் பட்டுள்ளதாகவும், இதனை பின்னர் நடாத்துவதற்குரிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் ஞாயிற்றுக் கிழமை (10) தெரிவித்தார்
காது, மூக்கு, தொண்டை, தொடர்பான வைத்திய சிகிச்சை இலவசமாக வெளிநாட்டு விசேட வைத்திய நிபுணர்களினால் இதன்போது வழங்கப்படவுள்ளன.
இருந்த போதிலும், குறித்த மனித உறுப்புக்களில் குறைபாடுகள் மற்றும் நோய்த் தாக்கங்களை எதிர் கொள்கின்றவர்கள் முன் கூட்டியே தமது பெயர் விபரங்களை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை, மற்றும், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர்களிடம், தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறும் மேற்படி வைத்திய சாலைகளின நிருவாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment