ஏறாவூர்ப் பிரதேசத்தில் பழைமையான வீடு ஒன்றை உடைத்துகொண்டிருந்தவேளை சுவர் சரிந்துவிழுந்து கூலித்தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று 03.01.2016 முற்பகல் 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர்- ஐயங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய எஸ்.சேகர் என்பவரே உயிரிழந்துள்ளார்
கூலித்தொழிலாளியான இவர் பழைய வீட்டின் சுவரின் ஒருபகுதியை உடைத்து சிதைவுகளை துப்பரவு செய்துகொண்டிருந்த வேளையில் அச்சுவரின் மற்றைய பகுதி சரிந்து இவர் மீது விழ்ந்துள்ளது. ஆவ்விடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
0 Comments:
Post a Comment