இலங்கை நிர்வாக சேவையில் தரம் ஒன்றில் விசேட தரத்திற்கு பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் அவர்கள் தெரிவாகியுள்ளார்.
இருபத்தி இரண்டு வருட நிருவாக சேவையில் அனுபவம் வாய்ந்த இவர் தற்போது மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளராக கடமையாற்றி வருகின்றார். இதற்கு முன்னர் தம்பலகாமம், ஏறாவூர், பட்டிப்பளை, ஆகிய பிரதேச செயலகங்களில் உதவிப்பிரதேச செயலாளராகவும், குச்சவெளி, கல்முனை தமிழ்ப்பிரிவு, நாவிதன்வெளி, திருக்கோவில் போன்ற பிரதேசங்களில் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச பிரதேச செயலாளராக சிறந்த முறையில் சேவையாற்றி மக்களின் நன்மதிப்பினை பெற்றுள்ள நிலையில் இவ் விசேட தரம் கிடைக்கப் பெற்றுள்ளது
பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சையின் பிரகாரம் இலங்கையில் இருந்து 44 நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் இந்த விசேட தரத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment