3 Jan 2016

முயற்சியுடன் நாம் செயற்பட்டால் நிட்சயமாக வெற்றி எம்மைத் தேடிவரும் - நிசாங்கனி (வீடியோ)

SHARE
மாணவர்களாகிய நாம் ஒரு இலட்சியத்தை அடைய வேண்டுமாக இருந்தால் கற்பிக்கும், ஆசிரியர்களிடத்தில் முழு நம்பிக்கை இருக்க வேண்டும். பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், நப்பிக்கையாகவும், உண்மையாகவும், நடக்க வேண்டும், முயற்சியுடன் நாம் செயற்பட்டால் நிட்சயமாக வெற்றி எம்ம்மைத் தேடிவரும் எனத் தெரிவிக்கின்றார், கல்வி பொது தர உயர்தரப் பரீட்சையில் மட். வின்சன் மகளிர் உயர்தர மகளிர் பாடசாலையிலிருந்து கணிதப் பிரிவில் தோற்றி வெற்றி பெற்றுள்ள வெல்லாவெளியைச் சேர்ந்த கௌரிகாந்தன் நிசாங்கனி என்ற மாணவி.
கௌரிகாந்தன் நிசாங்கனி கல்வி பொது தர உயர்தரப் பரீட்சையில் மட். வின்சன் மகளிர் உயர்தர மகளிர் பாடசாலையிலிருந்து கணிதப் பிரிவில் தோற்றி வெற்றி 3 ஏ சித்திகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 4 வது இடத்தையும், பெற்றுக் கொண்டுள்ளார்.

எனது எதிர் கால இலட்சியம் ஒரு பொறியியலாளராக வரவேண்டும் என்பதற்காக நான் கல்வி பொது தர உயர்தரப் பிரிவில் கணிதப் பிரிவைத்; தெரிவு செய்து தற்போது அத்துறையில் பெறியியல் பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.

எனது வெற்றிக்காக இறைவனுக்கும், பெற்றோருக்கும், எனக்குக் கற்பித்த ஆசிரியர்களுக்கும், உனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என அவர் மேலும் தெரிவிக்கின்றார்.



SHARE

Author: verified_user

0 Comments: