30 Jan 2016

தொடர்ச்சியாக இன அழிவைச் சந்தித்த இனமாக தமிழினம் திகழ்ந்து கொண்டிருக்கின்றது - பா.அரியநேத்திரன் (வீடியோ)

SHARE
தொடர்ச்சியாக இன அழிவைச் சந்தித்த இனமாக தமிழினம் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறு பல்லாயிரக்கணக்கான எமது அப்பாவி உயிர்களை இழந்தும்கூட எமக்காக இதுவரையில் எந்த தீர்வும் பெறவில்லை.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 29 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு வியாழக் கிழமை (28)  பிற்பகல், கொக்கட்டிச்சோலை காலாசார  மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு “மறந்தாலும் மண்ணும் இரையாகும்”  எனும் தலைப்பில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…

இலங்கை நாட்டிலே ஆட்சி மாற்றங்கள் வரும்போதும் எமக்கான தீரு;வுகள் எட்டப்படும் என்ற கனவுகளும் எமக்குள் இருந்து கொண்டிருக்கின்றது. சர்வதேசத்தினூடாகத்தான் தமிழ் மக்கள் அவர்களுக்குரிய இலக்கை எட்டக்கூடியதாகவுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: