30 Jan 2016

கோட்டைமுனை மகாமாரியம்மன் ஆலய பஞ்சகுண்ட மஹா கும்பாபிஷேகம்

SHARE
மட்டக்களப்பு கோட்டைமுனை மகாமாரியம்மன் ஆலய பஞ்சகுண்ட மஹா கும்பாபிஷேகம் நேற்று (29) வெகு சிறப்பாக நடைபெற்றது.

விநாயகர் வழிபாடு, புண்ணியாக வாசனம், தம்ப பூஜை, யாக பூஜை, தீபாராதனை, திருமுறைப் பாராயணம் மற்றும் மகா அபிஷேகம் என்பன இடம்பெற்றன.

புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்திகளான நிர்த்தன கணபதி, விஸ்வகர்மா, காயத்திரி, தட்சணாமூர்த்தி, மகாலக்ஷ்மி, துர்க்கா பரமேஸ்வரி,ஆதிவைரவர் மற்றும் பஞ்சதள இராஜகோபுரம், இரட்டை மணிக் கோபுரங்கள் என்பனவற்றிக்கு கும்பாபிஷேகம் இடம்பெற்றது.

கிரியைகளை சபரிமலை ஐயப்ப குருசுவாமி பிரம்மஸ்ரீ P தானுவாசுதேவ சிவாச்சாரியார் தலைமையில் உதவிக் குருமார்கள் நிகழ்த்தினர்.

இதே வேளை, மட்டக்களப்பு கோட்டைமுனை மகாமாரியம்மன் அலய மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நேற்று (28) நடைபெற்றது.

புதிதாகப் பிரதிஷ்டை பண்ணப்பட்ட விஸ்வகர்மா, காயத்திரி, தடசணாமூர்த்தி, மகாலக்ஷ்மி, துர்க்கா பரமேஸ்வரி மற்றும் ஆதிவைரவர் மூர்த்திகளுக்கு அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தினர்.

காலையில் விநாயகர் வழிபாடு, புண்ணியாக வாசனம், தீபாராதனை, திருமுறைப் பாராயணம் மற்றும் கிரியா விளக்கவுரை என்பன இடம்பெற்றன.
SHARE

Author: verified_user

0 Comments: