மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல், மற்றும், மண்ணெண்ணை போன்றன அடிக்கடி இல்லமல் போவதைக் கண்டித்து பொதுமக்கள் ஞாயிற்றுக் கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அடிக்கடி இவ்வெரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல், மற்றும், மண்ணெண்ணை என்பன இல்லை என விளம்பரப் பலகை இடுவதனால் மிகத் தூர இடங்களிலிருந்து வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
களுவாஞ்சிகுடி நகரில் இருக்கும் ஒரே ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம். இதுமாத்திரம்தான், மக்களுக்கு சேவை வழங்குவதில் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பஙற்கு அளப்பெரியது எனவே இவ்வெரிபொருள் நிரப்பு நிலையத்தை நடாத்துபவர் பெற்றோல் இல்லை என விளம்பரம் போட்டுவிட்டு அடிக்கடி பெற்றோல் நிலையத்தை மூடிவிட்டுச் செல்கின்றார். இதனால் நாம் தினமும் ஏமாற்றத்துடன் செல்கின்றோம் என ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவித்தனர்.
பின்னர் அவ்விடத்திற்கு வந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிசார் ஆர்ப்பாட்டக் காரர்களுடன் கலந்துரையாடியதையடுத்து கலைந்து சென்றனர்.
0 Comments:
Post a Comment