3 Jan 2016

மட். வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலை கல்வி பொதுதர உயர் தரப் பரீட்சையில் சாதனை.

SHARE
தற்போது வெளியாகியிருக்கும் கல்வி பொது தர உயர்தரப் பரீட்சையில் மட். வின்சன் மகளிர் உயர்தர மகளிர் பாடசாலையிலிருந்து கணிதப் பிரிவில் எஸ்.நிசாங்கனி என்ற மாணவி 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 4 வது இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில்  இப்பாடசாலையில் கணிதப் பிவிலிருந்து, மாவட்ட மட்டத்தில் கபிலா 3 ஏ சித்திகளைப் பெற்று 5 வது இடத்தையும், பிரவீனா 6 வது இடத்தையும், எம்.பேச்சுமா 9 வது இடத்தையும், றெலிசியா அஸ்விதா 16 வது 24 வது இடத்தையும், பெற்று பொறியியல் பிரிவுக்குத் தெரிவு செய்யப் பட்டுள்ளனர்.

விஞ்ஞானப் பிரிவில் எல்.புங்கவி என்ற மாணவி 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 3 வது இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 29 வது இடத்தையும், பெற்றுள்ளார்.

இந்நிலையில் விஞ்ஞானப் பிரிவிலிருந்து மாவட்ட மட்டத்தில் ஆர்ப்பிக்கா 11 வது இடத்தையும், தர்மிக்கா 12 வது இடத்தையும், கஜாநனி 16 வது  கனிஸ்கா 26, இடத்தையும், யனோஜா 28 வது இடத்தையும், நிலுக்சி 32 வது இடத்தையும், சுரஞ்சிதா 33 வது அபிநாயா 36 வது இடத்தையும்,  விராஜினி 37, வி.மைசாகினி 39 இடத்தையும், பெற்றுள்ளனர்.

வர்த்தகப் பிரிவிலிருந்து  பிரியங்கா என்ற மாணவி 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதோடு, 9 பேர் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகியுள்ளதாகவும்,

கலைப் பிரிவிலிந்து  வை.ஆபிராமி, 3 ஏ சித்திகளையும், வி.புருசோத்தனா 3 ஏ ஆகிய 2 பேர் சட்டத் துறைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்தாகவும்,  மட். வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலை அதிபர் திருமதி.இராஜகுமாரி கனகசிங்கம் தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: